மன்னாரில் இளம் யுவதி பரிதாப பலி;சோகத்தில் குடும்பம்

தீயில் எரிந்து ஆபத்தான நிலையில் மன்னார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு இருந்த இளம் யுவதி ஒருவர் சிகிச்சை பயனின்றி உயிரிழந்தார்.

மன்னார் பகுதியில் வசித்து வந்த இளம் யுவதி காதல் விவகாரம் காரணமாக தீயில் எரிந்து தீக் காயங்களுடன் வைத்தியசாலை அனுமதிக்கப்பட்டதாகவும் கூறப்படுகின்றது.

இச்சம்பவத்தில் பத்திநாதன் மரிய பிரிசில்லா [பூஜா ] வயது 20 வயதுடைய இளம் யுவதியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இந்நிலையில் சம்பவம் தொடர்பாக பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

குறித்த யுவதி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.