நிதி நிறுவனம் ஒன்றை நடாத்தி வாடிக்கையாளர்களின் பெருமளவு பணத்தை சுருட்டிக்கொண்டு யாழிலிருந்து கடல்வழியாக தப்பி ஓடியவரை கொண்டு சென்றவர் யாழ்.வல்வெட்டித்துறையில் அடையாளம் காணப்பட்டுள்ளார்.
இதனையடுத்து குறித்த நபர் தனிமைப்படுத்தப்படுள்ளார்.
கிழக்கு மாகாணம் திருகோணமலையை சேர்ந்த முகமட் அன்சாரி மற்றும் அவருடைய மனைவி, மகன் ஆகியோர் தமிழகம் வேதாரண்யம் கோடிக்கரை பகுதியில் தமிழக கடலோர பாதுகாப்பு படையினால் கைது செய்யப்பட்டிருந்தனர்.
குறித்த நபர் நிதி நிறுவனம் ஒன்றை நடத்திவந்ததுடன், கிழக்கு மாகாணத்தில் 200 கோடி ரூபாயும், நாடு முழுவதும் 1200 கோடி ரூபாயும் மோசடி செய்துள்ளார்.
இதனையடுத்து குறித்த நபர் நாட்டைவிட்டு தப்பி ஓடியுள்ளதாக கூறப்படுகின்றது.
இந்நிலையில் குறித்த மோசடி பேர்வழியையும் அவருடைய குடும்பத்தாரையும் தமிழகத்திற்கு படகுமூலம் கொண்டு சென்றவர் வல்வெட்டித்துறை – தொண்டமனாறு பகுதியை சேர்ந்த ஒருவர் என அடையாளம் காணப்பட்டிருக்கின்றார்.
இதனடிப்படையில் குறித்த நபர் வீட்டிலேயே தனிமைப்படுத்தப்பட்டுள்ளதுடன் பீ.சி.ஆர் பரிசோதனை நடத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.