வெளிநாட்டு பெண்ணின் செயற்பாடு! தலைகுணியும் யாழ். மக்கள்!

யாழ்ப்பாணத்திற்கு சுற்றுலா விஜயம் மேற்கொண்ட வெளிநாட்டு பெண்ணொருவரின் செயற்பாடு குறித்து சமூக வலைத்தளங்களில் அதிகம் பேசப்படுகிறது.

மனநலம் பாதிக்கப்பட்ட நிலையில், கைவிடப்பட்ட இளைஞன் ஒருவருக்கு பெண்ணொருவர் உதவி செய்துள்ளார்.

அநாதரவாக கைவிப்பட்ட நிலையில், யாழ்ப்பாணம் வேம்படி சந்தியின் தெருவோரத்தில் வசித்து வரும் இளைஞருடன் குறித்த பெண் உரையாடியுள்ளார்.

குறித்த இளைஞன் அனைவராலும் ஒதுக்கப்பட்ட நிலையில், கண்டுகொள்ளாத தன்மை காணப்படுகிறது.

இந்நிலையில் குறித்த இளைஞனுடன் பேசும் வெளிநாட்டுப் பெண், உணவு உள்ளிட்ட உதவிப் பொருட்களை வழங்கியதுடன், அருவருடன் அருகில் இருந்து நீண்ட நேரம் கலந்துரையாடியுள்ளார்.

இது தொடர்பான காணொளி ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.

வெளிநாட்டு பெண்ணின் செயற்பாடு குறித்து பலரும் பாராட்டு தெரிவித்துள்ள நிலையில், அங்குள்ள மக்களின் இயலாமை குறித்து வெட்கப்படுவதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.

Get real time updates directly on you device, subscribe now.

You might also like