வெள்ளை சீனிக்கான அதிகபட்ச சில்லறை விலையை அறிவித்து விசேட வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
நுகர்வோர் விவகார ஆணையத்தின் தலைவர் ஓய்வு பெற்ற மேஜர் ஜெனரல் சாந்த திசானநாயக்கவால் இன்று (புதன்கிழமை) முதல் அமுலுக்கு வரும் வகையில் இந்த விசேட வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
அதன்படி, பொதி செய்யப்பட்ட ஒரு கிலோ வெள்ளை சீனியின் அதிகபட்ச சில்லறை விலை 90 ரூபாயாகவும், அதேநேரம், பொதி செய்யப்படாத ஒரு கிலோ வெள்ளை சீனியின் அதிகபட்ச சில்லறை விலை 85 ரூபாயாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது
அத்துடன், இறக்குமதி செய்யப்படும் வெள்ளை சீனியின் விற்பனை விலை 80 ரூபாயாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.