யாழ்.தென்மராட்சி இடம்பெற்ற மிக மோசமான செயல்! வைத்தியசாலை ஊழியரும் சிக்கினார்

யாழ்.தென்மராட்சி கரம்பகம் பகுதியில் நேற்றய தினம் இரவு முற்றுகையிடப்பட்ட விடுதி மட்டுமல்லாமல் கருக்கலைப்பு இடம்பெற்றதாகவும், அதற்கான சாதனங்கள் அங்கே மீட்கப்பட்டதாகவும் கூறப்படுகின்றது.

பொதுமக்கள் வழங்கிய முறைப்பாட்டை தொடர்ந்து பொலிஸார் நடத்திய விசேட சுற்றிவளைப்பின்போது குறித்த நிலையம் முற்றுகையிடப்பட்டு இரு பெண்கள் மற்றும் நிலைய உரிமையாளர் ஆகியோர் கைது செய்யப்பட்டிருந்தனர்.

இதன்போது குறித்த குடிசை வீட்டிலிருந்து கருக்கலைப்பு சாதனங்களும் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸ் வட்டாரங்கள் கூறுகின்றன.

மேலும் விசுவமடு மற்றும் நல்லூர் ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்த பெண்களே விடுதியில் தொழிலில் ஈடுபட்டு கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த நிலையத்திற்கு மருந்துப் பொருட்களை வழங்கி மந்திகை வைத்தியசாலை ஊழியர் ஒருவரும் நேற்று இரவு கைது செய்யப்பட்டு பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

ஆன்மீகம்

சினிமா

மருத்துவம்

உலகம்

Latest Articles