ஆடம்பர திருமணத்தை நடத்த அனுமதி -யாழ். நகரில் பிரபல ஹோட்டலுக்கு வைக்கப்பட்டது “சீல்”

அனுமதி எதுவும் பெறாது ஆடம்பரமாக திருமணத்தை நடத்த அனுமதித்ததால் யாழ் நகரப்பகுதியில் அமைந்துள்ள பிரபல தனியார் ஹோட்டல் ஒன்றுக்கு இன்றையதினம் சீல் வைக்கப்பட்டுள்ளது.

நாட்டில் அதிகரித்து வரும் கொரோனா தொற்றை அடுத்து இறுக்கமான பல கட்டுப்பாடுகளை அரசாங்கம் விதித்து வருகிறது.

இந்தசூழ் நிலையில் ஹோட்டல்களில் திருமண நிகழ்வை நடத்த வேண்டுமெனில் சுகாதாரப்பிரிவினரின் அனுமதி பெறப்படவேண்டும்.

ஆனால் எவ்வித அனுமதியும் பெறாமலேயே பிரமாண்டமானமுறையில் திருமண நிகழ்வை நடத்த இன்றையதினம் ஹோட்டல் நிர்வாகம் அனுமதி வழங்கியதை அடுத்து அங்கு சென்ற சுகாதாரப்பிரிவினர் ஹோட்டலுக்கு சீல் வைத்து சென்றுள்ளனர்.

ஆன்மீகம்

சினிமா

மருத்துவம்

உலகம்

Latest Articles