யாழ்ப்பாணம் கோப்பாய் சந்தியில் இன்றுகாலை இடம்பெற்ற கத்திக்குத்து தாக்குதலில் ஒருவர் காயமடைந்துள்ளார்.
கோப்பாய் சந்திக்கு அண்மையிலுள்ள இறைச்சிக்கடையில் இந்த சம்பவம் இடம்பெற்றது.
இறைச்சிக்கடை உரிமையாளருக்கும், வாடிக்கையாளருக்குமிடையில் ஏற்பட்ட வாய்த்தர்க்கத்தையடுத்து, இறைச்சிக்கடை உரிமையாளரால் இறைச்சிவெட்ட பயன்படுத்திய கத்தியினால் வாடிக்கையாளரை குத்திக் காயப்படுத்தினார்.
இதனையடுத்து அவரை பொலிசார் கைது செய்துள்ளதுடன் காயமடைந்தவர் கோப்பாய் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.