தல தீபாவளியில் புது மாப்பிளையின் விபரீத முடிவு! தமிழ் குடும்பத்தில் ஏற்பட்ட பெரும் சோகம்

குளத்துக்கு அருகில் உள்ள தூக்கில் தொங்கிய நிலையில் ஆண் ஒருவரின் சடலமொன்று நேற்றிரவு தீபாவளி தினத்தில் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

திருகோணமலை – சம்பூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியிலேயே இவ்வாறு குறித்த சட்டம் மீட்கப்பட்டுள்ளது.

இவ்வாறு மீட்கப்பட்டவர் மூதூர்- சம்பூர்-03 பகுதியைச் சேர்ந்த திருமணமாகி 3 மாதங்கலேயே ஆன புது மணமகனான யோகைய்யா நித்தியன் (34வயது) என பொலிஸார் அடையாளம் கண்டுள்ளனர்.

மேலும் உயிரிழந்தவரின் சடலத்தை பிரேதப் பரிசோதனைக்காகத் திருகோணமலை பொது வைத்தியசாலைக்குக் கொண்டு செல்வதற்குரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அத்துடன் மரணம் தொடர்பிலான விசாரணைகளை முன்னெடுத்து வருவதாகவும் சம்பூர் பொலிஸார் மேலும் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது..

தவிர கடந்த ஜனவரி முதல் இன்று வரைக்கும் சம்பூர் பொலிஸ் பிரிவில் 10க்கும் மேற்பட்டோர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பதியப்பட்டுள்ளது, அதில் பெரும்பாலும் வறுமையால் ஏற்படும் குடும்ப பிரச்சனைகளால் தற்கொலை செய்துகொள்கின்றனர் என கூறப்படுகிறது.

ஆன்மீகம்

சினிமா

மருத்துவம்

உலகம்

Latest Articles