இன்று யாழ்ப்பாணம் சுதந்திர நாடு!!

தமிழீழ விடுதலைப் புலிகள் தோற்கடிக்க ப்பட்டமை காரணமாக, இலங்கையின் ஜனாதிபதியால், யாழ்ப்பாணத்துக்குச் சென்று உரையாற்ற முடிகிறது எனத் தெரிவித்துள்ள, பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் தலைவர் கோட்டாபய ராஜபக்‌ஷ, “இன்று அது (யாழ்ப்பாணம்), சுதந்திரமானதொரு நாடு” என்றும் குறிப்பிட்டுள்ளார்.

இந்தியன் எக்ஸ்பிரஸ் ஊடகத்துக்கு, நேற்று (25) அவர் வழங்கிய நேர்காணலிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையின் பாதுகாப்புச் செயலாளராக இருந்த போது, கொலைகளைப் புரிந்தார் என்று குற்றஞ்சாட்டப்படுவது தொடர்பாகக் கேட்கப்பட்ட போது பதிலளித்த அவர், “தவறெதனையும் நான் செய்யவில்லை என எனக்குத் தெரியும்; சரியானதையே நான் செய்தேன் என எனக்குத் தெரியும். என்னுடைய மனசாட்சி, அதைச் சொல்கிறது” என்று பதிலளித்தார்.

போர் என்பது, இலகுவான, நன்னம்பிக்கையுடைய விடயம் கிடையாது எனத் தெரிவித்த அவர், பொதுமக்களின் கொலைகள் அல்லது உயிரிழப்புகள் இடம்பெற்றன என, மறைமுகமாக ஏற்றுக் கொண்டார்.

இலங்கையில் இடம்பெற்ற போரை, தான் ஆரம்பித்திருக்கவில்லை எனக் குறிப்பிட்ட அவர், அப்போரை முடிவுக்கே கொண்டு வந்ததாகத் தெரிவித்தார்.

அத்தோடு, தமிழீழ விடுதலைப் புலிகள் இல்லாத நாடு, சிறந்த இடமாகவே உள்ளது எனவும் தெரிவித்தார். “படையினர் மாத்திரமன்றி, அப்பாவிப் பொதுமக்களும், பயங்கரவாதத்தால் கொல்லப்பட்டனர்.

யார் எதிரி, யார் நண்பன் என்றோ, பொதுமக்களின் வாகனம் எது, இராணுவத்தின் வாகனம் எது என்றோ, குண்டுகளுக்குப் புரிவதில்லை. ஆகவே, எனக்கு வருத்தங்கள் இல்லை. போரின் போது கூட, ஒவ்வொரு நாளும் நான் உறங்குவது வழக்கம்” என்று தெரிவித்தார்.

இந்­திய அதி­கா­ரிகள் எம்­முடன் பேசு­வ­தில்லை. அதுதான் பாரிய பிரச்­சி­னை­யாக இருக்­கி­றது. எமது ஆட்சிக் காலத்தில் எதிர்க்­கட்சியினரை இரா­ஜ­தந்­தி­ரிகள் சந்­திப்­ப­தற்­கான சந்­தர்ப்பம் காணப்­பட்­டது. அது வழ­மை­யாக இருந்­தது. ஆனால் தற்­போது இலங்­கை­யி­லுள்ள இந்­திய உயர்ஸ்­தா­னிகர் கூட எம்மை சந்­திப்­ப­தற்கு தயங்­கு­கிறார்.

இது ஏன் என்று எனக்குப் புரி­ய­வில்லை. இந்­திய அதி­கா­ரிகள் எம்மை சந்­திப்­பதில் இலங்கை அர­சாங்கம் ஏன் கவ­லை­ய­டை­கின்­றது என்று எனக்குப் புரி­ய­வில்லை என்று முன்னாள் பாது­காப்பு செய­லாளர் கோத்­த­பாய ராஜபக் ஷ தெரி­வித்­தி­ருக்­கிறார்.

எமது அர­சாங்கம் இந்­தி­யா­வுக்கெதி­ராக இலங்கை மண்ணை எந்­த­வொரு நாடும் பயன்­ப­டுத்­து­வ­தற்கு இட­ம­ளிக்­க­வில்லை. இரா­ஜ­தந்­திரம் என்­பது கலை­யாகும்.

அது கலந்­து­ரை­யாடல், ஈடு­பாடு மற்றும் பரஸ்­பர நம்­பிக்­கையைப் பொறுத்தே அமையும். இலங்­கை­யு­ட­னான நட்பில் இந்­தியா, சீனா என்ற விவ­கா­ரத்தை கைவிட்டு வெ ளியே வர­வேண்டும் என்றும் கோத்­த­பாய ராஜ­பக் ஷ குறிப்­பிட்­டுள்ளார்.

கோத்­த­பாய ராஜபக் ஷ இந்­தி­யாவின் ‘இந்­தியன் எக்ஸ்­பிரஸ்’ பத்­தி­ரி­கைக்கு வழங்­கி­யுள்ள செவ்­வி­யி­லேயே மேற்­கண்­ட­வாறு குறிப்பிட்டி­ருக்­கிறார்.

கேள்வி: இந்­தி­யாவின் கரி­சனை உங்­க­ளது அணு­கு­மு­றையை மாற்­று­வ­தற்கு தலைமை வகித்­ததா?

பதில்: எங்­க­ளுக்கு இந்­தி­யாவின் காங்­கிரஸ் அர­சாங்­கத்­திடம் சிறந்த புரிந்­து­ணர்வு இருந்­தது. அது அரசபணி ரீதி­யா­கவே இருந்­தது. புலி­களைத் தோற்­க­டிப்­பதில் இந்­தி­யாவின் முழு­மை­யான ஆத­ரவைப் பெற எம்மால் முடிந்­தது.

ஆனால் நரேந்­திர மோடி தலை­மை­யி­லான அர­சாங்­கத்தின் அரச அதி­கா­ரிகள் இலங்­கையை அப்­போது வித்­தி­யா­ச­மான வழியில் பார்த்­தனர். அதா­வது நிலை­மையை உரி­ய­மு­றையில் புரிந்­து­கொள்­ளாமல் இவ்­வாறு செயற்­பட்­டனர்.

விசே­ட­மாக இலங்­கைக்கு வந்த நீர்­முழ்கிக் கப்­பலின் உண்மைநிலை தொடர்பில் தெரி­யாமல் இருந்­தனர். இதில் இந்­திய ஊட­கங்கள் முக்­கிய வகி­பா­கத்தை வகித்­தன.

எவ்­வா­றெ­னினும் இந்­திய அரச அதி­கா­ரிகள் இது தொடர்பில் எம்­முடன் பேச்­சு­வார்த்தை நடத்­தி­யி­ருக்­கலாம். அது­மட்­டு­மன்றி இந்­தியா, இலங்­கைக்கெதி­ராக செயற்­ப­டு­வ­தாக இலங்­கையின் சில தேசப்­பற்­றா­ளர்­களும் செயற்­பட்டு வந்­தனர். இங்கு முக்­கி­ய­மான விடயம் என்­ன­வெனில் புலி­க­ளுக்கு இந்­தி­யாவில் பயிற்­சி­ய­ளிக்க இந்­திரா காந்தி ஆத­ர­வ­ளித்தார்.

அச் செயற்­பாடு இலங்­கையில் இந்­திய எதிர்ப்பு உணர்வை உரு­வாக்­கி­யது. இலங்­கையின் உள்­ளக விவ­கா­ரங்­களில் இந்­தியா அநா­வ­சிய தலை­யீ­டு­களை மேற்­கொள்­வ­தாக இலங்கை மக்கள் உணர்ந்­தனர். கடந்த அர­சாங்க மாற்­றத்­திலும் இவ் விடயம் உண­ரப்­பட்­டது. இந் நிலைமை தொடர்பில் இந்­திய அர­சாங்கம் ஆழ­மாக பார்க்க வேண்டும். மாறாக இவ்­வாறு செயற்­படக் கூடாது.

கேள்வி: நீங்கள் இந்­தி­யா­வுடன் தொடர்பில் இருக்­கின்­றீர்­களா?

பதில்: இல்லை. அவர்கள் எம்­முடன் பேசு­வ­தில்லை. (சிரிக்­கிறார்) அதுதான் இங்கு பிரச்­சி­னை­யாக இருக்­கி­றது. எமது ஆட்சிக் காலத்தில் எதிர்க்­கட்­சி­யி­னரை இரா­ஜ­தந்­தி­ரிகள் சந்­திப்­ப­தற்­கான சந்­தர்ப்பம் காணப்­பட்­டது.

அது வழ­மை­யாக இருந்­தது. இரா­ஜ­தந்­தி­ரிகள் மட்­டு­மன்றி இந்­தி­யா­வி­லி­ருந்து வரு­கின்ற அனை­வரும் அப்­போது இலங்­கையின் எதிர்க்­கட்சித் தரப்­பி­னரை சந்­தித்­தனர்.

ஆனால் தற்­போது இலங்­கை­யி­லுள்ள இந்­திய உயர்ஸ்­தா­னிகர் கூட எம்மை சந்­திக்கத் தயங்­கு­கிறார். இது ஏன் என்று எனக்குப் புரி­ய­வில்லை. இந்­திய அதி­கா­ரிகள் எம்மை சந்­திப்­பதில் இலங்கை அர­சாங்கம் ஏன் கவ­லை­ய­டை­கின்­றது என்று எனக்குப் புரி­ய­வில்லை.

கேள்வி: யுத்தம் முடி­வ­டைந்து பத்து வரு­டங்கள் ஆகின்­றன. சமா­தானம் தற்­போது கிடைத்­தி­ருக்­கி­றதா?-
பதில்: 30 வரு­டங்­க­ளாக யுத்தம் நீடித்­தது. யுத்­தத்துக்குப் பின்­ன­ரான இலங்­கையின் அபி­வி­ருத்­தி­களே புலி­களைத் தோற்­க­டித்­ததை விட மிகப் பெரிய வெற்­றி­யாகக் காணப்­பட்­டன.

ஆனால் அதனை சர்­வ­தேச சமூ­கமும் சர்­வ­தேச அமைப்­புக்­களும் ஏற்­றுக்­கொள்­ள­வில்லை. 2009 ஆம் ஆண்­டி­லி­ருந்து 2014 ஆம் ஆண்டு வரை­யான காலப்­ப­கு­தியில் நாம் பாரிய சாத­னை­களை அடைந்தோம். உட்­கட்­ட­மைப்பு வச­திகள் மட்டுமன்றி அர­சியல் சாத­னை­க­ளையும் படைத்தோம்.

மாகாண சபைகள் அறி­மு­கப்­ப­டுத்­தப்­பட்­டி­ருந்த போதிலும் 2013 ஆம் ஆண்டு வரை வட­மா­காண சபைத் தேர்தல் நடத்­தப்­பட்­டி­ருக்­க­வில்லை. கருணா அம்மான் மற்றும் ஈ.பி.டி.பி. தரப்­பினர் போன்றோர் புலி­க­ளி­ட­மி­ருந்து ஆரம்­பத்­தி­லேயே வில­கி­விட்­டனர்.

தேர்­த­லுக்கு முன்னர் நாம் அவர்­க­ளிடம் ஆயு­தங்­களைக் களைந்தோம். அதன் பின்­னரே வட­மா­காண சபைத் தேர்­தலை நடத்­தினோம். அவ்­வாறு செய்­தி­ருக்­கா­விட்டால் தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்­பினால் அதி­கா­ரத்­திற்கு வந்­தி­ருக்க முடி­யாது.

மஹிந்த ராஜ­பக்­ ஷவும் ஜனா­தி­ப­தி­யாக நீடித்­தி­ருக்­கலாம். ஆனால் நாங்கள் நீதி­யான சுதந்­தி­ர­மான தேர்­தலை நடத்­தினோம். நாம் வட­மா­காண சபைத் தேர்­தலில் தோற்­கப்­போ­கிறோம் என தெரிந்­து­கொண்டும் வடக்கு மக்கள் அவர்­க­ளுக்குத் தேவை­யா­ன­வர்­களை தெரிவு செய்யும் சந்­தர்ப்­பத்தை பெற்­றுக்­கொ­டுத்தோம்.

2013 ஆம் ஆண்டு முடிவில் அதி­க­ள­வான வீடு­களும் காணி­களும் விடு­விக்­கப்­பட்­டன. பாரிய அபி­வி­ருத்தித் திட்­டங்கள் முன்­னெ­டுக்­கப்­பட்­டன.

வீதிகள், ரயில் தண்­ட­வா­ளங்கள், மின்­சாரத் திட்­டங்கள் உரு­வாக்­கப்­பட்­டன. எம்­மிடம் சர­ண­டைந்த பயங்­க­ர­வ­ாதி­க­ளுக்கு நாம் புனர்­வாழ்வளித்தோம்.

30 வருட யுத்­தத்­துக்குப் பின்னர் ஒரே இரவில் சமா­தா­னத்தை அடைய முடி­யாது. அந்தத் தத்­து­வங்­களை முன்­வைக்கும் மக்கள் தொடர்ந்து இருந்­தனர்.

காயங்கள் ஆற்­றப்­ப­டு­வ­தாக நான் கூற­வில்லை. காரணம் கடந்த 3 வரு­டங்­க­ளாக என்ன நடந்­தது என்று எனக்குத் தெரி­ய­வில்லை. ஆனால் அர­சியல் சுதந்­திரம் குறித்துப் பேசு­வ­தற்கு முன்னர் பொரு­ளா­தார சுதந்­தி­ரத்தை மக்­க­ளுக்குப் பெற்­றுக்­கொ­டுப்­பதே முக்­கி­ய­மா­னது என நான் கரு­து­கின்றேன்.

ஆனால் அவர்கள் அதி­காரப் பகிர்வு குறித்து மட்­டுமே பேசு­கின்­றனர். அது இரண்டாம் பட்­ச­மாகும். மக்­க­ளுக்கு உணவு, வேலை­வாய்ப்பு, அடிப்­படைத் தேவைகள் என்­பன பெற்­றுக்­கொ­டுக்­கப்­பட வேண்டும். ஆனால் தமிழ் அர­சி­யல்­வா­திகள் தமது அர­சியல் ஆர்­வத்தை இச் செயற்­பாட்­டுக்கு அப்பால் முன்­னெ­டுக்க முயற்­சிக்­கின்­றனர்.

கேள்வி: நீங்கள் மீண்டும் அதி­கா­ரத்­துக்கு வந்தால் இவ் விட­யங்­க­ளுக்கா முக்­கி­யத்­துவம் அளிப்­பீர்கள்?

பதில்: ஆம். நாம் என்ன செய்­து­கொண்­டி­ருந்தோமோ அத­னையே தொடர்வோம். நாட்டின் அனைத்து மக்­களையும் போன்று வடக்கு, கிழக்கு மக்­களும் சம­மா­ன­வர்கள் என்­பதை உணரும் வகையில் சந்­தர்ப்­பங்­களை பெறும் வகையில் தேவை­யான நட­வ­டிக்­கை­களை எடுப்போம்.

கேள்வி: உங்கள் இரு சகோ­த­ரர்­களைப் பற்றி கூற­மு­டி­யுமா? பசில் ராஜ­பக் ஷ, மஹிந்­தவின் ஆலோ­ச­க­ராக செயற்­பட்டார். நீங்கள் அவர்­க­ளுடன் அடிக்­கடி பேசு­வீர்­களா?

பதில்: நாம் எப்­போ­துமே ஒரு அணி­யா­கவே வேலை செய்­கின்றோம். (சிரிக்­கிறார்) நாம் நாட்ைடப் பற்­றியே சிந்­திக்­கின்றோம். ஆனால் அடிக்­கடி பேசக் கிடைப்­ப­தில்லை. யுத்­தத்­தின்­போது தொடர்ச்­சி­யா­கவே இணைப்பில் இருந்தோம்.

இவ் ஒற்­றுமை எம்­மிடம் ஆரம்­பத்­தி­லி­ருந்தே வந்­தது. ஒற்­றுமை எப்­போ­துமே பல­மா­னது. அதைத்தான் எமது தந்தை எமக்கு கற்­பித்தார். நாம் இன­ரீ­தி­யா­கவும் மத ரீதி­யா­கவும் பிரிந்தால் வெளிநாட்டு சக்­திகள் எமது நாட்டில் அழுத்தம் பிர­யோ­கிப்­பார்கள். எனவே ஒற்­றுமை பற்­றியே நாம் எப்­போதும் சிந்­திக்க வேண்டும்.

கேள்வி: உங்கள் கரங்கள் கறை­ப­டிந்­துள்­ள­தாக பலர் கூறு­கின்­றனர். யுத்­தத்­தின்­போது ஒரு பாது­காப்பு செய­லா­ள­ராக இருந்து நீங்கள் புலி­களை தோற்­க­டித்த போது ஆயி­ரக்­க­ணக்­கான மக்­களை கொன்­ற­மை குறித்து குற்­றஞ்­சாட்­டப்­ப­டு­கி­றது.

இக் குற்­றச்­சாட்­டுக்­க­ளுக்கு உங்கள் பதில் என்ன? அத்­துடன் இவ் யுத்தம் உங்கள் தனிப்­பட்ட வாழ்வை எவ்­வாறு பாதித்­தது? யுத்­தத்­தின்­போது தூக்­க­மற்ற இர­வு­களை சந்­தித்­தீர்­களா?

பதில்: நான் தவறு ஏதும் செய்­ய­வில்லை. சரி­யா­ன­தையே செய்தேன் என்று எனக்குத் தெரியும். எனது மன­சாட்சி அதனைக் கூறு­கி­றது. சிவி­லி­யன்கள் கொலை தொடர்பில் நீங்கள் கேட்­கும்­போது யுத்தம் என்­பது இல­கு­வா­னதல்ல என்­பதை நீங்கள் புரிந்­து­கொள்ள வேண்டும்.

அது இலங்­கை­யோ இந்­தி­யா­வோ பாகிஸ்­தானோ ஏன் ஈராக்­கா­கவோ கூட இருக்­கலாம். யுத்தம் என்­பது நல்ல விடயமல்ல. ஆனால் இலங்­கையில் நான் யுத்­தத்தை உரு­வாக்­க­வில்லை.

மாறாக நான் யுத்­தத்தை முடித்தேன். யுத்தம் இருப்­பதை விட அதனை முடிப்­பது மேன்­மை­யா­னது. புலிகளில்­லாமல் எமது நாடு ஒரு சிறந்த இடத்திலிருக்­கி­றது.

இன்று இலங்கை ஜனா­தி­ப­தி­யால் எங்கும் போகலாம். இரா­ணுவ வீரர்கள் மட்­டு­மன்றி பயங்­க­ர­வாதம் கார­ண­மாக சாதா­ரண மக்­களும் உயி­ரி­ழந்­தனர். யார் நண்­பர்கள், யார் எதி­ரிகள் என்­பதை குண்­டுகள் அடை­யாளம் காண்­ப­தில்லை. யுத்­தத்­தின்­போது நான் இரவில் நித்­தி­ரை­ய­டைந்­தி­ருக்­கிறேன்.

கேள்வி: யுத்­தத்தின் இறுதிக் கட்­ட­டத்தில் யுத்தம் முடி­வ­தற்கு முன்­பாக புலி­க­ளுடன் ஏதா­வது பேச்­சு­வார்த்தை நடந்­ததா? புலி­களின் தலைவர் தொடர்பு கொண்­டாரா?

பதில்: புலி­க­ளுடன் பேச்­சு­வார்த்தை நடத்­து­வதில் எனக்கு நம்­பிக்­கை­யில்லை. அது நேரத்தை வீணாக்கும் செயல் என்றே நான் கரு­து­கின்றேன்.

பிர­பா­கரன் என்­னுடன் தொடர்­பு­கொள்ள போது­மா­னவர் அல்ல. ஆனால் கே.பி.யைப் பாருங்கள். அவர் கொழும்­புக்குக் கொண்­டு­வ­ரப்­பட்­டதும் அது அவரின் இறு­தி­நே­ரமே என்று அவர் கருதினார்.

ஆனால் அவர் இன்றும் மகிழ்ச்சியாக இருக்கின்றார். நாம் அவரின் கடந்த காலத்தையும் தவறுகளையும் புரிந்துகொள்ள முயற்சித்தோம். எனவே அவர் இயல்பான வாழ்வை வாழ்வதற்கு இடமளித்தோம். கே.பி.யை புனர்வாழ்வு செய்தமையானது சிறந்த விடயம். அதை நாம் இன்றும் நம்புகின்றோம்.

கேள்வி: யுத்தத்தை முடிப்பதற்கு இந்தியா உதவியது. ஆனால் இலங்கை சீனாவுடன் நெருங்கி இந்தியாவை காட்டிக்கொடுத்ததாக உணர்வு வந்ததே?

பதில்: இந்தியாவின் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் சிவ்சங்கர் மேனன் ஒரு புத்தகத்தை வெளியிட்டார். அதில் இலங்கை இந்தியாவின் பாதுகாப்பு தொடர்பில் கரிசனையுடன் இருப்பதாக அவர் குறிப்பிட்டிருந்தார்.

எமது அரசாங்கம் இந்தியாவுக்கெதிராக இலங்கை மண்ணை எந்தவொரு நாடும் பயன்படுத்துவதற்கு இடமளிக்கவில்லை. இராஜதந்திரம் என்பது கலையாகும். அது கலந்துரையாடல், ஈடுபாடு மற்றும் பரஸ்பர நம்பிக்கையைப் பொறுத்தே அமையும். இலங்கையுடனான நட்பில் இந்தியா, சீனா என்ற விவகாரத்தை கைவிட்டு வெ ளியே வரவேண்டும்.

Get real time updates directly on you device, subscribe now.

You might also like