மக்கள் அதிகமான யாழ்.நகரில் கணவன் கண்முன் மனைவிற்கு நடந்த கொடூரம்

யாழ். நகரில் புடவை நிலையம் நடாத்தும் வர்த்தகர் தீபாவளிப் பண்டிகை விற்பனை முடிந்து வீடு திரும்பிய சமயம் மனைவியின் கழுத்தில் கத்தி வைத்து அச்சுறுத்தி 6 லட்சம் ரூபா பணமும் 12 பவுண் தாலிக் கொடியும் கொள்ளையிடப்பட்டுள்ளது.

யாழ். நகரின் மத்தியில் இரு புடவையகம் நடாத்தும் சோமசுந்தரம் வீதியில் வசிக்கும் வர்த்தகர் தீபாவளி விற்பனையில் ஈடுபட்டு நேற்று முன்தினம் இரவு கணவனும் மனைவியுமாக வீடு திரும்பியுள்ளனர்.

இதன்போது வீட்டிற்கு அண்மையில் 3 மோட்டார் சைக்கிளில் காத்திருந்த ஐவர் திடீரென பாய்ந்து மனைவியை இழுத்து மனைவியின் கழுத்தில் கத்தியை வைத்து அச்சுறுத்தியதோடு கணவனின் கையில் இருந்த பையை பறித்தெடுத்துள்ளனர்.

இவ்வாறு கொள்ளையர்கள் பறித்த பையில் விற்பனைப் பணம் 6 லட்சம் ரூபாய் இருந்த அதேநேரம் மனைவியின் கழுத்தில் அணிந்திருந்த 12 பவுன் தாலிக்கொடு மற்றும் சங்கிலியையும் அறுத்துக்கொண்டு ஓடியுள்ளனர்.

இதன்போது ஏற்பட்ட இழுபறியில் சங்கிலி மட்டும் வீழ்ந்தமையினால் உரியவர்களின் கரத்தில் கிட்டியது.

இது தொடர்பில் பொலிசாரிடம் மேற்கொண்ட முறைப்பாட்டினையடுத்து பொலிசார் மோப்ப நாய் சகிதம் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஆன்மீகம்

சினிமா

மருத்துவம்

உலகம்

Latest Articles