35 வருடங்களின் பின்னர் யாழ் பாடசாலை ஒன்றிற்கு பெருமை சேர்தத மாணவர்; குவியும் வாழ்த்து

தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை பெறுபேறுகள் நேற்றிரவு வெளியாகியுள்ளது.

இந் நிலையில் அச்சுவேலி, காட்டுப்புலம் அரச தமிழ் கலவன் பாடசாலையில் 35 வருடங்களுக்கு பின்னர் மாணவன் ஒருவன் புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தி எய்தியுள்ளார்.

சுரேஷ் தபிஸ்ரன் என்ற மாணவனே 179 புள்ளிகளைப் பெற்று இவ்வாறு பாடசாலைக்கு பெருமை சேர்த்துள்ளார்.

மிகவும் பின் தங்கிய இந்த பிரதேசத்தில் பல இன்னல்களுக்கு மத்தியில் கல்வியினைக் கற்று சித்தியடைந்துள்ளார்.

இந்த நிலையில் பெற்றோருக்கும், பாடசாலைக்கும், ஊருக்கும் பெருமை தேடிக்கொடுத்த மாணவன் சுரேஷ் தபிஸ்ரனுக்கு பாராட்டுக்கள் குவிந்துவருகின்றது.