சிறுநீர் கழித்தமையினால் நோயாளியை ஆம்புலன்ஸில் இருந்து கீழே தள்ளிய டிரைவர்!!

விபத்துக்குள்ளான ஒருவர் ஆம்புலன்ஸில் சிறுநீர் கழித்மையினாலும், வாந்தி எடுத்தாலும் ஆம்புலன்ஸ் டிரைவர் அவரை கீழே தள்ளிவிட்டு சென்ற சம்பவம் கேரள மாநிலத்தில் அரங்கேறியுள்ளது.

விபத்தில் காயமடைந்த நடுத்தரவயது இளைஞரன் ஒருவர் சாலையில் ஃயிருக்கு போராடிக் கொண்டிருந்தபோது அருகில் இருந்த பொதுமக்கள் ஆம்புலன்ஸுக்கு அழைப்பினை ஏற்படுத்தி தகவலை கூறினர்.

சம்பவ இடத்திற்கு வந்த ஆம்புலன்ஸ் தனியார் மருத்துவமனைக்கு சென்ற போது சிகிச்சை மறுக்கப்பட்டதால், அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது.

அப்போது ஆம்புலன்ஸ் டிரைவர் காயம்பட்டவரை வாகனத்தில் இருந்து கீழே இறக்கமுற்பட்டபோது, அவர் ஆம்புலஸில் சிறுநீர் கழித்தும், வாந்தி எடுத்திருப்பதைப் பார்த்து ஆத்திரம் அடைந்தார்.

மருத்துவமனையின் ஊழியர்கள் ஸ்டிரெச்சர், வீல்சேர் கொண்டு வருவதற்குள், அந்த ஆம்புலன்ஸ் டிரைவர், உயிருக்கு போராடிக்கொண்டிருந்தவரை ஸ்டிரெச்சரோடு ஆம்புலன்சில் இருந்து கீழே தள்ளிவிட்டு புறப்பட்டுச் சென்றடைந்ததாக தெரியவருகிறது.

இதில், அந்த ஸ்டிரெச்சர் தலைகீழாகக் கவிழ்ந்தது. இந்த காட்சிகளை அங்கிருந்தவர்கள் வீடியோ எடுத்து கேரள மாநிலத்தில் உள்ள ஊடகங்களுக்கு அனுப்பினர்.
இந்நிலையில் அந்த நபர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதையடுத்து, மனிதநேயத்தோடு நடந்து கொள்ளாத அந்த ஆம்புலன்ஸ் டிரைவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

Get real time updates directly on you device, subscribe now.

You might also like