பிறந்து சில மணி நேரத்தில் தூக்கி வீசப்பட்ட ஆண் குழந்தை!!

பிறந்து சில மணி நேரமே ஆன ஆண் சிசு பாலத்தின் கீழ் வீசப்பட்ட சம்பவம் திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

சுகநதியின் குறுக்காக வந்தவாசி-திண்டிவனம் நெடுஞ்சாலையில் ஐந்து கண் பாலம் அமைந்துள்ளது.

இந்த பாலத்தின் அடியில் பிறந்து சில மணிநேரமான ஆண்சிசு மிதந்தது. தொப்புள் கொடி கூட அகற்றப்படாமல் வீசப்பட்டிருந்த சிசுவை கண்ட பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
இதனையடுத்து பொலிசாருக்கு வழக்கப்பட்ட தகவலைத் தொடர்ந்து சிசுவை வீசிச் சென்றவர்கள் யார் என விசாரித்து வருகின்றனர்.

Get real time updates directly on you device, subscribe now.

You might also like