மீன் மூலம் கொரோனா பரவாது என்பதை நிறுபித்த முன்னாள் அமைச்சர்

முன்னாள் மீன்பிடித்துறை அமைச்சர் திலிப் வெதஆராச்சி, மீனை பச்சையாக உட்கொண்ட சம்பவம் கொழும்பில் இன்று காலை நடந்த ஊடக சந்திப்பில் இடம்பெற்றுள்ளது.

பேலியகொடை மீன்சந்தையில் கொரோனா வைரஸ் துரிதகதியில் பரவியதோடு கொரோனா வைரஸின் இரண்டாவது அலையின் இரண்டாவது மிகப்பெரிய கொத்தனியாகவும் அது அடையாளப்படுத்தப்பட்டது.

மீன்களை உட்கொள்வதன் ஊடாக கொரோனா வைரஸ் பரவலாம் என்கிற அச்சம் மக்களிடையே பரலவாக ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில் மக்கள் மத்தியிலுள்ள இந்த அச்ச உணர்வை அகற்ற முன்னாள் அமைச்சர் திலிப் ஊடக சந்திப்பை கொழும்பில் இன்று நடத்தி, அந்த ஊடக சந்திப்பிலேயே சமைக்காத பச்சை மீனை உட்கொண்டுகாட்டினார்.

ஆன்மீகம்

சினிமா

மருத்துவம்

உலகம்

Latest Articles