சமுர்த்தி பயனாளிகளுக்கு பிரதமர் அறிவித்த மகிழ்ச்சியான செய்தி 7 சதவீத வட்டியில் கடன் !

சமுர்த்திப் பயனாளர்கள் சமுர்த்தி வங்கியில் வைப்புச் செய்த தொகையில் 90 சதவீதத்துக்கு அரச வங்கிகளில் கடன் பெறும் திட்டத்தை அரசு அறிமுகப்படுத்துவதாக பிரதமர் மகிந்த ராஜபக்ச, வரவு செலவுத் திட்டத்தில் முன்மொழிந்துள்ளார்.

இந்தக் கடனுக்கு ஆண்டுக்கு 7 சதவீத வட்டி அறவிடப்படும் என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

2021ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்ட முன்மொழிவை நாடாளுமன்றில் முன்வைத்து உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்த முப்படையினருக்கு புதிய நவீன தொழில்நுட்ப வசதிகளை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது அவர் சுட்டிக்காட்டினார்.

பொது பாதுகாப்பை வலுப்படுத்தும் நோக்கில் சிறப்பு திட்டங்களை நிவர்த்தி செய்ய 2 ஆயிரத்து 500 மில்லியன் ரூபாய் ஒதுக்கப்படும் என்று பிரதமர் குறிப்பிட்டார்.

தொழில்நுட்ப துறையின் விரிவாக்கத்திற்காக 800 ஆயிரம் மில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட உள்ளது என்றும் பிரதமர் கூறினார்.