28 ஆண்டுகளில் முதல் தடவையாக பாடசாலைக்கு பெருமை சேர்த்த மாணவி!

28 ஆண்டுகளில் முதல் தடவையாக மட்டக்களப்பு பிரதேச மாணவி ஒருவர் ஐந்தாம்தர புலமைப்பரிசில் பரீட்சையில் சித்திபெற்று தன் பாடசாலைக்கு பெருமை சேர்த்துள்ளார்.

மட்டக்களப்பு கல்வி குடா கல்வி வலயத்திற்குட்பட்ட தொப்பிக்கல் பகுதியில் மிகவும் பின்தங்கிய பிரதேசமான ஈரளக்குளம் கிராம பிரிவுக்குட்பட்ட பெரியவட்டவான் கண்ணகி வித்தியால மாணவியே இவ்வாறு சாதனை படைத்துள்ளார்.

குறித்த பாடசாலை ஆரம்பிக்கப்பட்டு 28 ஆண்டுகள் கடந்த நிலையில் இவ்வருடம் 2020 இல் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் முதல்தடவையாக 160 புள்ளிகள் பெற்று செல்வி.வி.நிறோ என்னும் மாணவியே சாதனை படைத்துள்ளார்.

எந்த அடிப்படை வசதிகளும் அற்ற வறிய நிலையில் உள்ள குறித்த மாணவி இந்த சாதனையை படைத்துள்ளார்.

இந்த நிலையில் சாதனை படைத்து பாடசாலைக்கும் கிராமத்திற்கும் வலயத்திற்கும் பெருமை பெற்றுத்தந்த மாணவிக்கு பல்வேறு தரப்பினரும் பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளனர்.