பிரித்தானியாவில் தமிழ் குடும்பஸ்தர் திடீர் மரணம்! சோகத்தில் குடும்பத்தினர்

பிரித்தானியாவில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளமை பெரும் சோகத்தினை ஏற்படுத்தியுள்ளது.

இந்த சம்பவம் கடந்த ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றுள்ளது.

சம்பவத்தில் சாவகச்சேரியை பிறப்பிடமாக கொண்ட இரு பெண் பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

சம்பவ தினத்தன்று அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டதை அடுத்து வைத்தியசாலைக்கு செல்லும் வழியில் குறித்த நபர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அத்துடன் 1972 ஆம் ஆண்டு பிறந்த இவர் சாவகச்சேரி இந்துக்கல்லூரியின் பழைய மாணவர் எனவும் கூறப்படுகின்றது.

இந்நிலையில் இவரது திடீர் மரணம் அவரது குடும்பதினருக்கும் உறவினர்களுக்கும் சோகத்தினை ஏற்படுத்தியுள்ளது.

ஆன்மீகம்

சினிமா

மருத்துவம்

உலகம்

Latest Articles