திருமணமானால் பிரிந்துவிடுவோம்; பெற்றோருக்கு பேரதிர்ச்சி கொடுத்த தோழிகள்

திருமணம் நடந்தால் பிரிந்துவிடுவோம் என்ற பயத்தில் தோழிகள் இருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவின் கேரளத்தில் இந்த சமபவம் இடம்பெற்றுள்ளது.

கேரள மாநிலம் கொல்லம் அருகே உள்ள அஞ்சல் பகுதியை சேர்ந்தவர் அணில்குமார். இவருடைய மகள் அமிர்தா. அமிர்தாவும் பக்கத்துக்கு ஊரை சேர்ந்த அசோகன் என்பவரின் மகள் ஆர்யா ஆகிய இருவரும் கல்லூரியில் இறுதி ஆண்டு பட்டப்படிப்பு படித்து வந்தனர். இவர்கள் இருவரும் நெருங்கிய தோழிகளாக இருந்துவந்துள்ளனர்.

இந்த நிலையில் அமிர்தாவுக்கு திருமணம் செய்ய பெற்றோர் முடிவு செய்தனர். இதனையடுத்து அமிர்தாவுக்கு மாப்பிள்ளை தேடி வந்தனர். இது குறித்து அமிர்தா தனது தோழியிடம் கூறியுள்ளார்

அத்துடன் எனக்கு எனது தோழியை பிரிந்து வாழமுடியாது. எனவே எனக்கு திருமணம் வேண்டாம் என அவரின் பெற்றோரிடம் கூறியுள்ளார்.

ஆனால் அமிர்தாவுக்கு அறிவுரை கூறி திருமணம் செய்துகொள்ள அவரது பெற்றோர்கள் வற்புறுத்தியுள்ள நிலையில் தோழிகள் இருவரும் மனவருத்தத்தில் இருந்தனர்.

இதனால் மனமுடைந்த தோழிகள் இருவரும் ஒன்றாக இறந்துவிடலாம் என முடிவெடுத்து அவர்கள் இருவரும் தற்கொலை செய்ய முடிவு செய்து கடந்த 14 ஆம் திகதி தீபாவளி அன்று வெளியே சென்று வருகிறோம் என்று வீட்டில் கூறிவிட்டு அமிர்தா மற்றும் ஆர்யா வீட்டைவிட்டு வெளியே சென்றுள்ளனர்.

பின்னர் அவர்கள் இருவரும் அன்று இரவு 7 மணிக்கு மூவாற்றுப்புழா ஆற்றுக்கு சென்று இருவரும் சேர்ந்து கைகளை கோர்த்தவாறு பாலத்தில் இருந்து ஆற்றுக்குள் குதித்து தற்கொலை செய்துகொண்டுள்ளனர்.

இந்த சம்பவம் அப்பௌதியில் பெரும்சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. இதனையடுத்து இரண்டு நாட்களுக்கு பிறகு அமர்தா மற்றும் ஆர்யாவின் உடல் மீட்கப்பட்டது.

ஆன்மீகம்

சினிமா

மருத்துவம்

உலகம்

Latest Articles