நாட்டில் வேலைதேடும் இளையோருக்கு தனியார் துறையில் வேலைவாய்ப்பு – பதிவு செய்யக் கோரிக்கை

நாட்டில் வேலையில்லாதவர்களுக்கு தனியார் துறையில் வேலைவாய்ப்பு வழங்குவதற்காக தேசிய மனிதவள மற்றும் வேலைவாய்ப்புத் புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.

அதன்படி, அனைத்து மாவட்ட செயலகங்களிலும் மாவட்ட வேலைவாய்ப்பு நிலையங்களை திணைக்களம் நிறுவியுள்ளது.

இதுதொடர்பில் மனிதவள மற்றும் வேலைவாய்ப்புத் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது;

மாவட்ட வேலைவாய்ப்பு நிலையங்கள் மூலமாகவோ அல்லது வேலைவாய்ப்புத் திணைக்களத்தின் http://dome.gov.lk/web/index.php?lang=en என்ற வலைத்தளத்தைப் பார்வையிடுவதன் மூலமாகவோ வேலை தேடுபவர்கள் தம்மை வேலை தேடுபவராக பதிவு செய்யலாம் என்று திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

அவ்வாறு பதிவுசெய்தவர்கள் வெற்றிடங்களுக்கு பரிசீலிக்கப்படுவார்கள். மேலும் அந்தந்த மாவட்டங்களில் உள்ள தனியார் துறையில் உள்ள வெற்றிடங்களுக்குப் பரிந்துரைக்கப்படுவார்கள்.

மாவட்ட செயலகங்களில் நிறுவப்பட்ட மாவட்ட வேலைவாய்ப்பு நிலையங்கள் மூலம் பதிவு செய்ய விரும்பும் இளையோர்கள் அந்த நிறையங்களைத் தொடர்புகொண்டு முன்கூட்டியே சந்திப்பு செய்ய வேண்டும்.

மாவட்ட வேலைவாய்ப்பு நிலையங்களின் தொலைபேசி எண்கள் வருமாறு;

யாழ்ப்பாணம் – 021 2219359
வவுனியா – 0242228025
முல்லைத்தீவு 021 2290037
கிளிநொச்சி – 021 2283966
மன்னார் – 023 2222232
திருகோணமலை – 026 3209245
மட்டக்களப்பு – 065 2227193
அம்பாறை – 063 2222233
பதுளை – 055 2228030
நுவரெலியா – 052 2224186
கொழும்பு – 011 23692