மண்டைதீவில் நீரில் மூழ்கி சிறுவர்கள் இருவர் உயிரிழந்துள்ளனர் என்று ஊர்காவற்றுறை பொலிஸார் தெரிவித்தனர்.
இந்தச் சோகச் சம்பவம் இன்று (நவ. 21) சனிக்கிழமை மாலை 5 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
மண்டைதீவைச் சேர்ந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த சாவிதன் (வயது-7) சார்வின் (வயது -5) ஆகிய இருவருமே மழைநீர் சேகரிக்கும் குன்றுக்குள் தவறி வீழ்ந்து உயிரிழந்தனர் என்று யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அறிக்கையிடப்பட்டுள்ளது.
சடலங்கள் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை சவச்சாலையில் வைக்கப்பட்டுள்ளன.