யாழில் திருமண நிகழ்வில் கலந்துகொண்ட 100க்கும் மேற்பட்டோர் மீது அதிரடி நடவடிக்கை

யாழ்ப்பாணம்- சாவகச்சேரியில் சுகாதார நடைமுறைகளை பின்பற்றாது நடைபெற்ற திருமண நிகழ்வில் கலந்துகொண்டவர்களைத் தனிமைப்படுத்த நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக சுகாதாரப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

குறித்த திருமணத்தில் 50 பேர் மாத்திரமே பங்கேற்க முடியும். வெளிமாவட்டத்தைச் சேர்ந்தோர் கலந்து கொள்ள முடியாது.

சுகாதார நடைமுறைகளைப் பின்பற்ற வேண்டும் என்ற நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

ஆனாலும், முன்மொழியப்பட்ட நிபந்தனைகளை மீறி திருமண நிகழ்வில் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டுள்ளனர்.

இவ்வாறு சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றத் தவறிய திருமண வீட்டாரையும், திருமண நிகழ்வில் கலந்துகொண்டவர்களையும் தனிமைப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சுகாதார அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

ஆன்மீகம்

சினிமா

மருத்துவம்

உலகம்

Latest Articles