யாழின் சிரேஷ்ட சட்டத்தரணி குடும்பத்துடன் நாட்டை விட்டு வெளியேறினார்

யாழ் பல்கலைக்கழக முன்னாள் சட்டத்துறை தலைவரும், சட்டத்தரணியுமான கலாநிதி குமரவடிவேல் குருபரன் இங்கிலாந்திற்கு பயணமாகியுள்ளார்.

யாழ் பல்கலைக்கழக விரிவுரையாளர் பணியினை சில மாதங்களுக்கு முன் ராஜினாமா செய்திருந்தார்.

இந் நிலையில் அவருக்கு இங்கிலாந்தின் ஒஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளராக பணியாற்றுவதற்கு அழைக்கப்பட்டிருந்தார்.

இந் நிலையிலேயே சட்டத்தரணி கலாநிதி குருபரன் இங்கிலாந்திற்கு தனது குடும்பத்துடன் சில தினங்களுக்கு முன் பயணமாகியுள்ளார் என யாழ் செய்திகள் தெரிவிக்கின்றன.