முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு இருட்டுமடு பகுதியில் பிறந்த தனது குழந்தைக்கு ஏணி கட்ட வீட்டில் ஏறியகுடும்பஸ்தர் தவறிவீழ்ந்து படுகாயமடைந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதூர்.
குறித்த விபத்தின் போது காயமடைந்த குடும்பஸ்தர் முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்கைக்காக,
யாழ்போதனா மருத்துவமனை கொண்டு செல்லப்பட்டு பின்னர் மீண்டும் முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனை கொண்டுசெல்லப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
இச்சம்பவம் 21.11.2020 அன்று நடைபெற்றுள்ளது.
இருட்டு மடுவினை சேர்ந்த 36 அகவையுடைய இராமசாமி மோகன்றாச் என்ற மூன்று பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
குழந்தை பிறந்து பத்து நாட்கள் ஆகாத நிலையில் ஏணிகட்ட ஏறியபோது இந்த அனர்த்தம் இடம்பெற்றுள்ளது.