புட்டு சர்ச்சையில் சிக்கிய பொலிஸ் அதிகாரிக்கு இடமாற்றம்?

புட்டு சர்ச்சையில் சிக்கிய யாழ் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பிரசாத் பெர்னாண்டோவிற்கு இடமாற்றம் வழங்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கடந்த 20ஆம் திகதி மாவீரர் நாள் அனுட்டிப்பதற்கு தடைகோரி யாழ் நீதிவான் நீதிமன்றத்தில் யாழ்ப்பாணம், கோப்பாய் பொலிசார் தாக்கல் செய்த மனு மீதான விசாரணை இடம்பெற்றது.

இதன்போது சமர்ப்பணம் செய்த பிரசாத் பெர்னாண்டோ, புட்டும், சோறும், வடையும் சாப்பிட்டுக் கொண்டிருந்த வடக்கு தமிழர்கள், யுத்தத்தை முடித்ததன் மூலம் பீஸா சாப்பிடும் நிலைமையை உருவாக்கினோம் என தெரிவித்திருந்தார்.

இதற்கு நீதிமன்றத்திலேயே பிரதிவாதி தரப்பு சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் ஆட்சேபணை தெரிவித்த நிலையில் நீதிபதியும் அதிருப்தி தெரிவித்து, பொலிஸ் பொறுப்பதிகாரியை கட்டுப்படுத்தினார்.

இதனையடுத்து கடந்த இரண்டு நாட்களாக சமூக ஊடகங்கள் எங்கும் பிரசாத் பெர்னாண்டோவை வறுத்தெடுத்து வருகிறார்கள்.

இந்த நிலையில், அவருக்கு இடமாற்றம் வழங்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.