கொழும்பில் திடீரென சுகயீனமடைந்த கர்ப்பிணி பெண் மரணம்

கொழும்பில் கர்ப்பிணி பெண்ணொருவர் திடீரென சுகயீனமடைந்த நிலையில் களுபோவில வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்துள்ளார்.

இந்த பெண் திடீர் சுகயீனமடைந்து ஹோமாகம வைத்தியசாலைக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளார்.

அந்த வைத்தியசாலை கொரோனா நோயாளர்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ளமையினால் அவரை களுபோவில வைத்தியசாலைக்கு அனுப்புமாறு அறிவிக்கப்பட்டது.

அதற்கமைய அந்த பெண் அழைத்து வரப்பட்ட வாகனத்திலேயே களுபோவில வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.

ஹோமாகம வைத்தியசாலை கொரோனா வைத்தியசாலையாக பெயரிடப்பட்டுள்ள போதிலும் அதில் ஒரு பகுதி சாதாரண நோயாளிகளுக்காக ஒதுக்கப்பட்டுள்ளதாக குடும்ப சுகாதார பணியகத்தின் இயக்குனர் விசேட வைத்தியர் சித்ரமாலிடி சில்வா தெரிவித்துள்ளார்.

இதுவரையில் கொரோனா நோயாளிகள் அதிகரித்தமையினால் சாதாரண நோயாளிகளின் பகுதிகளும் கொரோனா நோயாளிகளுக்காக ஒதுக்கப்பட்டது.

எப்படியிருப்பினும் உயிரிழந்த கர்ப்பிணி பெண் களுபோவில வைத்தியசாலைக்கு மாற்றி அனுப்பப்பட்ட போது வைத்தியசாலையின் நோயாளர்காவு வண்டியை பயன்படுத்தியிருக்க வேண்டும் என தெரிவிக்கப்படுகிறது.

எனினும் அந்த பெண் உயிரிழந்தமைக்கான காரணம் இதுவரையில் வெளியாகவில்லை. மேலும் பிரேத பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக குறிப்பிடப்படுகின்றது.