இலஞ்சம் பெற்ற முன்னாள் அதிபருக்கு சிறைத்தண்டனை

மாத்­தளை விஜய வித்­தி­யா­ல­யத்தில் முதலாம் ஆண்­டுக்கு மாணவன் ஒரு­வனை சேர்த்­துக்­கொள்ள 2 லட்சம் ரூபா இலஞ்சம் கோரி அதில் ஒன்றரை இலட்சம் ரூபாவை பெற்றுக்கொண்­டமை தொடர்பில் குற்­ற­வா­ளி­யாக காணப்­பட்ட அப்­பா­ட­சா­லையின் முன்னாள் பெண் அதி­ப­ருக்கு 20 வருட சிறைத்தண்­டனை விதித்து கொழும்பு மேல் நீதி­மன்றம் நேற்று வெள்ளிக்கிழமை  தீர்ப்­ப­ளித்­துள்­ளது.

நான்கு குற்­றச்­சாட்­டுக்­களின்கீழ் தொடர்­பு­ப­டுத்­தப்­பட்­டி­ருந்த குறித்த வழக்கில் அக்­குற்றச்சாட்­டுக்கள் அனைத்தும் சந்­தே­கத்­திற்­கி­ட­மின்றி நிரூ­பிக்­கப்­பட்­டுள்­ளதால் ஒவ்­வொரு குற்றச்சாட்­டுக்­க­ளுக்கும் தலா 5 வரு­டங்கள் வீதம் கடூழிய சிறைத்தண்­டனை விதித்து நீதி­மன்றம் தீர்ப்­ப­ளித்­துள்­ளது.

எவ்­வா­றா­யினும் குறித்த 20 வருட சிறைத்தண்­ட­னையை 5 வரு­டங்­களில் அனு­ப­விக்க உத்­த­ர­விட்ட கொழும்பு மேல் நீதி­மன்ற நீதி­பதி கிஹான் குல­துங்க குற்­ற­வா­ளி­யான அதி­ப­ருக்கு 20000 ரூபா தடையும் விதித்­துள்ளார்.

2014ஆம் ஆண்டு மாத்­தளை விஜய வித்­தி­யா­ல­யத்­திற்கு முதலாம் தரத்­திற்கு மாணவன் ஒரு­வனை சேர்த்­துக்­கொள்­வ­தற்­காக மாண­வனின் தந்­தை­யிடம் பெற்றுக்கொண்ட ஒன்றரை இலட்சம் ரூபா­வையும் தண்­டனைப் பண­மாக மீளவும் பெற்றுக்கொள்­ளு­மா­று ­நீ­தி­பதி உத்­த­ர­விட்டார்.

இவ்­வாறு குற்­ற­வா­ளி­யாக காணப்­பட்டு தண்­டனை விதிக்­கப்­பட்ட மாத்­தளை விஜய வித்­தி­யா­ல­யத்தில் 2014ஆம் ஆண்டு அதி­ப­ராக இருந்த 47 வய­தான கலு ஆராய்ச்சி தயா­வதி என்­ப­வ­ருக்கே இவ்­வாறு தண்­டனை விதிக்­கப்பட்­டுள்­ளது.

2014ஆம் ஆண்டு பெப்­ர­வரி மாதம் 8ஆம் திகதி குற்­ற­வா­ளி­யாக மாத்­தளை விஜய வித்­தி­யா­ல­யத்தில் அதி­ப­ராக செயற்­பட்­டி­ருந்­த­போதே குறித்த அதி­ப­ரால் பாட­சா­லையில் முதலாம் வகுப்­புக்கு மாணவன் ஒரு­வனை சேர்த்துக்கொள்ள ஒன்­றரை இலட்சம் ரூபாவை இலஞ்­ச­மாக பெற்றுக்கொண்டார் என கூறியே நான்கு குற்­றச்­சாட்­டுக்­களின் கீழ் இலஞ்ச ஊழல் ஆணைக்­கு­ழு­வி­னரால் வழக்கு தொட­ரப்­பட்­டி­ருந்­தது.

நீண்ட வழக்கு விசா­ர­ணை­களின் பின்னர் வழக்கின் தீர்ப்­பினை அளித்த நீதிபதி பிர­தி­வா­திக்­கெ­தி­ரான அனைத்து குற்றச்சாட்டுக்களும் சந்தேகத்திற்கிடமின்றி நிரூபிக்கப்பட்டுள்ளதாக தீர்மானித்தார். அதனால் பிரதிவாதி குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் குற்றவாளி என நீதிபதி அறிவித்தார்.