அடுத்த 24 மணிநேரத்திற்குள் கொந்தளிக்க போகும் புயல்; எச்சரிக்கையுடன் இருக்க மக்கள் செய்யவேண்டியவை

இன்னும் 24 மணிநேரத்தில் வட, கிழக்கு உள்ளிட்ட கரையோர பகுதிகளில் சூறாவளி வலுவடையக் கூடும் என்று வளிமண்டல ஆராய்ச்சி திணைக்களத்தின் யாழ்.பிராந்திய பொறுப்பதிகாரி பிரதீபன் தெரிவித்துள்ளார்.

சூறாவளியால் ஏற்படவுள்ள காற்றின் வேகம், கடும் மழை, இடி, மின்னல் தாக்கங்களில் இருந்து பொது மக்களும், கடற்றொழிலாளர்களும் தங்களை பாதுகாத்துக் கொள்ளுமாறும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.

தற்போது வங்காள விரிகுடாவில் நிலை கொண்டுள்ள குறைந்த காற்றழுத்தம், எதிர்வரும் 6 மணித்தியாலங்களில் தாழமுக்க வலயமாக மாற்றமடையும் சாத்தியமாக உள்ளது. இது 24 மணித்தியாலங்களில் சூறாவளியாக மாற்றமடையக்கூடிய சாத்தியமும் உள்ளது.

இந்த நேரத்தில் பொதுமக்கள் செய்யவேண்டியவை, செய்யக்கூடாதவை என்னவென்று நினைவுறுத்துவது அவசியமாகிறது.

புயல் ஏற்படும்போதும், புயலுக்கு பின்னும் கவனமாக இருக்கவேண்டிய சில விஷயங்களை வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்துகிறது.

1. மின் சப்ளை, கேஸ் சிலிண்டர் இரண்டும் கட்டுக்குள் உள்ளதா என்பதைப் பார்க்கவும், இல்லையெனில், புயல் வரும் வேளையில் மெயின் விநியோகத்தை நிறுத்திவிடவும்.

2. வீட்டுக் கதவுகளை பூட்டி வைத்திருங்கள்

3. வீடு பாதுகாப்பான இடத்தில் இல்லையெனில், புயலுக்கு முன்பாகவே பாதுகாப்பான இடத்துக்கு செல்லுங்கள்.

4. வதந்திகளை நம்பாதீர்கள். கொதிக்கவைத்த நீரை அருந்துங்கள்.

5. கட்டுமானம் நடக்கும், கட்டிடம் பலவீனமான கட்டிடங்களுக்கு பக்கத்தில் போகாதீர்கள்.

மின்கம்பங்கள் பக்கத்தில் செல்லாதீர்கள். மின் ஒயர்கள் அறுந்துகிடக்க வாய்ப்புள்ளதால் கவனமாக இருங்கள்.