மொனரா­க­லை மாவட்­டத்தில் சிறு­நீ­ரக நோயினால் அதிகமானோர் பாதிப்பு

மொனரா­கலை மாவட்­டத்தில் 2018 ஆம் ஆண்டு மார்ச் மாதத்தின் இதுவரையிலான காலப்­ப­கு­தியில் 1534 பேர் சிறு­நீ­ரக நோயினால் பாதிப்­பிற்­குள்­ளா­கி­யி­ருப்­ப­தாக, மாவட்ட சுகா­தார சேவைப் பணிப்­பாளர் டாக்டர் பாலித திலீப்குமார தெரி­வித்­துள்ளார். ஊட­க­வி­ய­லாளர் சந்­திப்­பொன்றின் போதே அவர் மேற்­கண்ட தக­வலை வெளி­யிட்­டுள்ளார்.

அவர் தொடர்ந்தும் கூறு­கையில்,மொன­ரா­கலை மாவட்­டத்தில் சிறு­நீ­ரக நோயா­ளர்கள் வெள்ளவாய மற்றும் புத்­தலை போன்ற பகு­தி­க­ளி­லேயே அதிகளவில் காணப்­ப­டு­கின்­றனர்.
மொன­ரா­க­லையில் 102 பேர், வெள்ளவா­யவில் 271 பேர், புத்­த­லையில் 229 பேர், படல்­கும்­புரவில் 90 பேர், செவ­ன­க­லையில் 150 பேர், கதிர்­கா­மத்தில் 18 பேர், மெத­க­மையில் 64 பேர், சியாம்­ப­லாண்­டு­வையில் 186 பேர், மடுல்­லையில் 43 பேர், தன­மல்­வி­லையில் 274 பேர், பிபி­லையில் 105 பேர் என்ற எண்ணிக்கையில் சிறு­நீ­ரக நோயினால் பாதிக்­கப்­பட்­டுள்­ளனர்.

சுத்­த­மான குடிநீர் பாவ­னை­யின்­மையே இச்­சி­று­நீ­ரக நோய் ஏற்­படக் காரணமாகும். ஆகவே, இதுவிடயத்தில் அதிகூடிய கவனம் செலுத்தப்படல் வேண்டும் எனவும் குறிப்பிட்டார்.

Get real time updates directly on you device, subscribe now.

You might also like