வெளிநாட்டில் இருந்து வீடுதிரும்பிய கணவர்… மனைவியால் காத்திருந்த பேரதிர்ச்சி

வெளிநாட்டில் வேலை பார்த்து வந்த கணவன், வீட்டிற்கு திரும்பிய நிலையில் அவருடைய மனைவி வேறு நபருடன் குடும்பம் நடத்திவந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார்.

புதுக்கோட்டை மாவட்டம் குடுமியான்மலையில் வருவாய் ஆய்வாளராக பணிபுரிந்து வருபவர் ராஜேஸ்வரி. இவருக்கும் தென்காசி மாவட்டத்தைச் சேர்ந்த சாமி என்பவருக்கும் கடந்த 2008ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது.

இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ள நிலையில், சாமி மலேசியாவில் வேலை செய்துவந்துள்ளார். அவ்வப்போது விடுமுறையில் வந்து மனைவி பிள்ளைகளை பார்த்துவிட்டு சென்றுள்ளார்.

இந்நிலையில் மனைவி ராஜேஸ்வரிக்கு புதுக்கோட்டையில் அரசு வேலை கிடைத்ததையடுத்து, மனைவி குழந்தைகளை புதுக்கோட்டையில் வேறு வீடு பார்த்து கொடுத்துவிட்டு மீண்டும் மலேசியாவிற்கு சென்றுள்ளார்.

கணவர் அனுப்பும் பணத்தில் நகைகளை அதிகம் எடுத்து ஆடம்பரமாக வாழ்ந்து வந்த ராஜேஸ்வரிக்கு வருவாய் ஆய்வாளராக பதவி உயர்வு கிடைத்துள்ளது.

இந்நிலையில் ராஜேஸ்வரிக்கும், அவரது வீட்டு அருகே இருந்த தாஸ் என்ற நபருக்கும் பழக்கம் ஏற்பட்டு, நாளடைவில் அவருடன் குடும்பம் நடத்தியும் வந்துள்ளார்.

மலேசியாவில் இருந்து வந்த சாமி இதனை அவதானித்து அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளார். மேலும் தான் 12 வருடங்களாக சம்பாதித்த பணம் மற்றும் நகையை அபகரித்து தாஸ் என்பவர் வருவாய் ஆய்வாளராக பணிபுரிந்து வரும் என் மனைவி ராஜேஸ்வரி மற்றும் இரு குழந்தைகளையும் தன் கட்டுப்பாட்டில் வைத்துள்ளார்.

என் மனைவி மற்றும் குழந்தைகளையும் நகை மற்றும் பணத்தை மீட்டுத் தரவேண்டும் என்று கண்ணீர் மல்க புகார் அளித்துள்ளார். இதையடுத்து இந்த சம்பவம் குறித்து பொலிசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.