2021 ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்டம்! பெண்களுக்கான சுகாதார நப்கின்களுக்கு 15% வரி

2021 ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்டத்தில் அரசாங்கத்தால் முன்மொழியப்பட்ட சுகாதார நப்கின்களுக்கான 15% வரியை பெண் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹினீ கவிரத்ன மற்றும் டயானா கமகே ஆகியோர் இது தொடர்பாக இன்று நாடாளுமன்றத்தில் தங்கள் ஆட்சேபனைகளை எழுப்பினர்.

இதற்கிடையில், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன நாடாளுமன்ற உறுப்பினரான கீதா குமாரசிங்க, நாட்டில் பெண்கள் மற்றும் பாடசாலை மாணவர்களுக்கு இதைவிட முக்கியமானது என்ன என்றும் கேள்வியெழுப்பினார்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன சார்பாக 8 பெண் நாடாளுமன்ற உறுப்பினர்களும் ஐக்கிய மக்கள் சக்தி சார்பாக 03 உறுப்பினர்களும் தேசிய மக்கள் சக்தி சார்பாக ஒரு உறுப்பினரும் 09 ஆவது நாடாளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்துகின்றனர்.