நேற்றையதினம் மன்னாரில் பாடசாலை யாழ்ப்பாணத்தை சேர்ந்த இளம் ஆசிரியர் ஒருவர் கஞ்சாவுடன் கைதானதாக கூறப்பட்ட நிலையில் அது தொடர்பில் , புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன.
அதன்படி குறித்த ஆசிரியரை சிக்க வைப்பதற்காகவே அவரது மோட்டார் சைக்கிளிற்குள் விசமிகள் கஞ்சா பொதிகளை மறைத்து வைத்திருக்கலாமென கூறப்படும் நிலையில் குறித்த ஆசிரியர் நேற்று மாலையே விடுவிக்கப்பட்டுள்ளார்.
நேற்றையதினம் மன்னாரிலுள்ள பிரபல பாடசாலை ஆசிரியர் ஒருவர் கஞ்சாவுடன் கைது செய்யப்பட்டுள்ளதாக பரபரப்பாக செய்திகள் வெளியாகி இருந்தன.
இதனையடுத்து பொலிஸார், மேற்கொண்ட விசாரணையில், ஆசிரியரின் மோட்டார் சைக்கிளிற்குள் வேறு யாரோ கஞ்சாவை வைத்திருந்திருக்கலாமென தெரிய வந்ததை அடுத்து ஆசிரியர் விடுவிக்கப்பட்டுள்ளார்.
இந்த நிலையில் ஆசிரியரை பழிவாங்கும் நோக்கத்துடன் கஞசாவை மறைத்தது யார் என்பது தொடர்பில் பொலிசார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக மேலும் தெரிவிக்கப்படுகின்றது.