இராணுவம் சுற்றிவளைத்தபோதும் அஞ்சாமல் தீபமேற்றிய இளஞ்செழியன்

முல்லைத்தீவு நகர் பகுதியில் வசித்து வருகின்ற தமிழரசு கட்சியின் இளைஞர் அணி செயலாளரும் சமூக செயற்பாட்டாளருமான பீற்றர் இளஞ்செழியன் தன்னுடைய வீட்டில் தன்னுடைய சகோதரனுக்கு ஈகை சுடர் ஏற்றி அஞ்சலி செலுத்தினார்.

இந்நிலையில் அவருடைய வீட்டை சூழவும் ஆயுதம் தாங்கிய இராணுவத்தினர், பொலிசார் மற்றும் புலனாய்வாளர்கள் சுற்றி வளைத்துள்ளனர்.

எனினும் அவருடைய வீட்டில் சிவப்பு மஞ்சள் கொடிகளை பறக்க விட்டு தன்னுடைய உயிரிழந்த சகோதரரின் புகைப்படத்தை வைத்து அதற்கு முன்பாக சுடர் ஏற்றுவதற்கு தயாராகினார்.

அப்போது வீட்டை சூழ இராணுவம் பொலிசார் புலனாய்வாளர்கள் சுற்றி வளைத்துள்ளனர்.

எனினும், இளஞ்செழியன் விளக்கேற்றி அஞ்சலி செலுத்தினார். இந்நிலையில் குறித்த பகுதியில் பதட்டமான சூழல் நிலவி வருகின்றதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.