தலைமன்னாரிலிருந்து தனுஸ்கோடிக்கு சென்னை மாணவன் நீச்சல்!

சென்னையை சேர்ந்த கல்லூரி மாணவர் ராஜஈஸ்வர பிரபு தலைமன்னாரில் இருந்து தனுஷ்கோடிக்கு நீச்சல் அடித்து செல்வதற்கு இராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து விசைப்படகு மூலம் தலைமன்னாருக்குச் சென்றுள்ளார்.

நீச்சல் போட்டியில் ஆர்வம் கொண்ட சென்னையை சேர்ந்த 20 வயதுடைய கல்லூரி மாணவர் ராஜஈஸ்வரபிரபு பல்வேறு மாநிலங்களில் நடைபெற்ற நீச்சல் போட்டியில் பங்குபெற்று வெற்றிபெற்றுள்ளார்.

இந்நிலையில் தன்னுடைய நீச்சல் ஆர்வத்தை வெளிபடுத்தும் விதமாக மத்திய, மாநில அரசுகளிடம் முழுமையான அனுமதி பெற்று சுமார் 33 கிலோ மீட்டர் தூரம் கொண்ட தலைமன்னாரில் இருந்து தனுஷ்கோடி வரை நீச்சல் அடித்து வரவுள்ளார்.

அதற்காக இன்று காலை ஒரு விசைப்படகு மற்றும் ஒரு நாட்டு படகில் இராமேஸ்வரம் மீன்பிடிதுறைமுகத்தில் இருந்து நீச்சல் வீரர் ராஜஈஸ்வரபிரபு மற்றும் அவருடன் 14 மீனவர்கள் மற்றும் தமிழக விளையாட்டுதுறை ஆணையம் சார்பில் விஜயகுமார் என்பவர் என 16 பேர் அவரை கண்காணிப்பதற்கு அவருடன் இன்று காலை இராமேஸ்வரம் மீன்பிடிதுறைமுகத்தில் இருந்து புறப்பட்டு சென்றனர்.

இன்று நள்ளிரவு 1மணிக்கு தலைமன்னாரில் இருந்து நீச்சல் அடித்து புறப்படும் இவர் நாளை பகல் 12 மணிக்கு தனுஷ்கோடி வருவார் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இந்த மாத காலம் பாக்ஜலசந்தி கடற்பகுதியின் கடல் மற்றும் காற்றின் வேகம் குறைவாக இருப்பதால் இவர்கள் இந்த பகுதியக் தேர்ந்தெடுத்ததாகவும் இவர் 10மணி நேரத்திற்குள் தலைமன்னாரில் இருந்து தனுஷ்கோடி வருவார் என அவரின் பயிற்ச்சியாளர் தெரிவித்தார்.

கடந்த 1994ம் வருடம் 12வயது கொண்ட குற்றாலீசுவரன் சுமார் 12மணி நேரத்தில் தலைமன்னாரில் இருந்து தனுஷ்கோடிக்கு நீச்சல் அடித்து வந்தது குறிப்பிடதக்கது.

Get real time updates directly on you device, subscribe now.

You might also like