திருகோணமலையில் திடீரென உயிரிழந்த 13 வயது சிறுவனால் பதற்றம்!

திருகோணமலை – கிண்ணியா பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட குட்டியாகுளம் பகுதியில் 13 வயது சிறுவன் திடீரென உயிரிழந்துள்ள சம்பவம் பிரதேச மக்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சம்பவம்தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

கிண்ணியா வைத்தியசாலையில் 8ம் வகுப்பு படிக்கும் மாணவன் கிண்ணியா புதுக்குடியிருப்பு சேர்ந்த சிறுவனை இன்று அதிகாலை வயிற்று வலி கூறியதை அடுத்து பெற்றோர் வைத்தியசாலைக்கு கொண்டு சென்றுள்ளார்கள்.

எனினும் சுமார் 1 மணித்தியாலம் கடந்த பின்னும் வைத்தியர் சென்று பார்வையிடாத நிலையில் சிறுவன் துடிதுடித்து மரணம் அடைந்துள்ளதாக பெற்றோர் தெரிவித்துள்ளனர்.

வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக உறவினர்கள் தெரிவித்தனர்.

எனினும் வைத்தியசாலைக்கு கொண்டு வரும்போதே சிறுவன் உயிரிழந்த நிலையில் இருந்ததாக வைத்தியசாலை தரப்பினர் தெரிவிக்கின்றனர்.

ஆனாலும் மரணத்திற்கான காரணம் இதுவரை தெரியாத நிலையில் சிறுவனின் சடலம் தற்போது திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இதன் காரணமாக சிலமணி நேரம் வைத்தியசாலையில் பதற்றமான நிலை ஏற்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, கிழக்கு மாகாண வைத்தியசாலைகளில் அதிகளவான உயிரிழப்பிற்கு காரணம் வைத்தியர்களின் கவனயீனமே மக்கள் விசனம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.