முல்லைத்தீவில் விடுதலைப் புலிகளின் தங்கப் புதையலை பாதுகாக்கும் மர்மபொருள்..! (படங்கள்)

முள்ளிவாய்க்கால் கிழக்கு பகுதியில் விடுதலைப் புலிகள் புதைத்து வைத்த தங்கத்தை பொலிஸார் தேடியுள்ளனர்.

கிடைத்த தகவலுக்கு அமைய அந்தப் பகுதியில் இன்று நண்பகல் அகழ்வு பணி ஒன்றை மேற்கொண்டுள்ளனர்.

தங்கம் புதைத்ததாக சந்தேகிக்கப்படும் இடத்தில் சுமார் எட்டு அடி ஆழம் வரை கனரக வாகனத்தின் உதவியுடன் தோண்டும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.

எனினும் அந்தப் பகுதியில் ஏதோ ஒரு மர்ம பொருள் கனரக வாகனத்துடன் முட்டியமையால் தோண்டும் நடவடிக்கை நிறுத்தப்பட்டுள்ளது.

விடுதலைப் புலிகள் தங்கத்தை புதைத்து வைத்த பின்னர் சீமெந்து கலவை கொண்டு கொங்ரீட் தட்டு அமைத்திருக்கக் கூடும் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

அந்தப் பகுதியை உடைந்து சோதனை மேற்கொள்ள நீதிமன்றம் பொலிஸாருக்கு அனுமதி வழங்கியுள்ளது.

அதேவேளை குறித்த இடத்திற்கு தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளும் அழைக்கப்பட்டிருந்தனர்.

சுமார் 4 மணி நேரங்களின் பின்னர் குறிய ஆயுதம் கொண்டு உடைத்து எடுக்கப்பட்ட அந்தபொருள் என்னவென்று திணைக்கள அதிகாரிகளிடம் ஆராச்சிக்காக வழங்கப்பட்டது.

குறித்த பிரதேசத்தில் 7 அல்லது 8 அடி ஆழத்தின் கீழ் பாறைகள் படர்திருக்கின்றது. அது முல்லைத்தீவு கரையோரப்பகுதியில் இருந்து தொடராக யாழ்ப்பானம் வரை இவ்வாறன கடற்பாறைகள் படர்ந்துள்ளன

அதனுடைய கற்துண்டுகளே தற்பொழுது மீட்க்கப்பட்ட பொருளாக காணப்படுகின்றது என்று தொல்பொருள் திணைக்கள ஆராச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் விடுதலைப் புலிகளின் தங்கம் மீட்கப்படாத நிலையில் அகழ்வு பணி நிறைவிற்கு வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.