கிழக்கு மாகாண பாடாசாலைகள் அனைத்தும் நாளை (டிசெ.2) புதன்கிழமை தொடக்கம் வரும் வெள்ளிக்கிழமை (டிசெ.4) வரை மூடப்படுவதாக மாகாண ஆளுநர் அனுராதா யஹம்பத் அறிவித்துள்ளார்.
சீரற்ற காலநிலை காரணமாக இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
வங்காள விரிகுடாவில் ஏற்பட்டுள்ள தாழமுக்கம் புயலாக மாறி அடுத்த 24 மணிநேரத்தில் கிழக்கு மாகாணம் ஊடாக முல்லைத்தீவைக் கடந்து செல்லும் என்று வளிமண்டவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.