32 ஆண்டுகளில் 74 முறை தேடி வந்து பழிவாங்கும் பாம்பு

32 ஆண்டுகளில் 74 முறை நல்லப் பாம்புகள் கடிக்கு ஒருவர் ஆளாகும் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பாம்புக்கு ஏதேனும் துரோகம் செய்துவிட்டால் அது ஏழு ஜென்மத்திற்கு விடாமல் துரத்தி பழி வாங்கும் என்பதை சினிமாக்களில் மட்டுமே பார்த்துள்ளோம்.

ஆனால் இந்தியாவின் ஆந்திராவில் ஒரு கிராமத்தில் உள்ள நபரின் கதையை கேட்டால் பாம்புகள் பழிவாங்கும் என கருதும் அளவுக்கு உள்ளது.

ஆந்திரா மாநிலத்தில் சித்தூர் மாவட்டம் கும்மரா குடா கிராமத்தைச் சேர்ந்தவர் சுப்பிரமணியம் (45). இவரைத்தான் நல்லப் பாம்புகள் காரணமே இல்லாமல் பழி வாங்குகிறதாம். இவரது 45 வயதில் ஒரு முறை இரு முறை 72 முறை இவரை பாம்பு கடித்துள்ளதாம்.

கடந்த 32 ஆண்டுகளாக இதே போல் நல்லப் பாம்புகள் விடாமல் எந்த காரணமுமின்றி பழி வாங்கி வருகிறதாம்.

இவர் 5ஆம் வகுப்பு படித்த போது முதல் முறையாக இவரை பாம்பு கடித்தது. இதற்கு அடுத்து ஆண்டுக்கு இருமுறை சுப்பிரமணியத்தை தேடி வந்து இந்த பாம்பு கடித்து விடுகிறது. சொந்த ஊரை விட்டு பெங்களூருக்கு வேலைக்காக சென்றார். அங்கும் பாம்பு கடிக்குள்ளானார்.

இந்த முறை அமாவாசை தினத்தன்று ஒரு பாம்பு என் வீட்டின் முன்னால் நின்று கொண்டிருந்தது. இதனால் அவர் பயந்து கொண்டு வீட்டிற்குள் ஒளிந்து கொண்டார்.

இதே போன்ற சம்பவம் 32 ஆண்டுகளாக நடைபெறுகிறதாம். எனக்கு இது புதிதாக இருக்கிறது. எதற்காக இந்த பாம்புகள் என்னை பழி வாங்குகின்றன என்பது தெரியவில்லை என அவர் கூறுகின்றார்.

பாம்புகள் மீதான அச்சத்தால் நான் வீட்டை விட்டு எங்குமே செல்வதில்லை. விவசாயியான எனக்கு ஆண்டுதோறும் மருத்துவச் செலவாக 50 ஆயிரம் ரூபாயை செலவிட மிகவும் கடினமாக இருக்கிறது என்றார்.

இதுகுறித்து பாம்பு பிடிக்கும் தொழில் செய்யும் ரகுராம் கூறுகையில், பாம்புகளுக்கு ஞாபகச் சக்தி என்பது கிடையாது. அது எப்படி ஒருவரை காரணமே இல்லாமல் தேடி வந்து கடிக்கும் என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.