மூன்று உயிர்களை காவு வாங்கிய கோர விபத்து! கர்ப்பிணிப் பெண்ணும் பரிதாபமாக உயிரிழப்பு

மொரட்டுவ – எகொடஉயன பகுதியில் மோசஸ் லேன் அருகே இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் படுகாயமடைந்த கர்ப்பிணிப் பெண்ணும் உயிரிழந்துள்ளார்.

குறித்த விபத்தில் தனது ஒரு வயது மற்றும் 7 வயதுடைய குழந்தைகளை இழந்திருந்த கர்ப்பிணித்தாய் கருவிலுள்ள குழந்தையையும் இழந்திருந்தார்.

இந்த நிலையில் தாயும் இன்று காலை உயிரிழந்துள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது.

மேலும் விபத்து தொடர்பாக கைது செய்யப்பட்ட 20 வயது இளைஞனுக்கு 18 ஆம் திகதி வரை விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்த விபத்துக்கு காரணமான இளைஞன் தொடர்பில் தற்போது பல செய்திகள் வெளிவந்துள்ளன.

குறித்த 20 வயதுடைய லஹிரு பெர்னாண்டோ என்ற இளைஞன் சமூக ஊடகங்களில் தனது பயணம் தொடர்பான வீடியோவை பதிவிட்டு பந்தயம் கட்டி பணம் ஈட்டி வருவது தெரியவந்துள்ளது.

இவருக்கு ஒவ்வொரு இரவும் நெடுஞ்சாலைகளில் அதிக வேகத்தில் மோட்டார் சைக்கிள் ஓட்டும் பழக்கம் உள்ளது.

இதுபோன்ற சந்தர்ப்பங்களின் வீடியோக்களை பதிவுசெய்து தனது சமூக ஊடக கணக்குகளில் பகிர்ந்துள்ளார்.

இது தொடர்பில் பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன கருத்து தெரிவிக்கையில்,

வேகமாக வந்து விபத்தை ஏற்படுத்திய குறித்த சந்தேகநபர் இதறகு முன்னர் ஏற்படுத்திய விபத்துக்கும் நீதிமன்றம் அபராதம் விதித்துள்ளது.