பிரித்தானியாவில் பட்டப்பகலில் சிறுமி ஒருவர் நடந்து செல்வதைக் கண்டு, பின் தொடர்ந்து சென்ற நபர் ஒருவரை அவரிடம் மோசமாக நடந்து கொண்ட சிசிடிவி காட்சி வெளியாக பார்ப்போரை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
பிரித்தானியாவின் Salisbury நகரில் இருக்கும் Churchill பூங்காவில் கடந்த அக்டோபர் மாதம் 27-ஆம் திகதி சிறுமி ஒருவர் தனியாக, அதுவும் அருகில் பரபரப்பு மிகுந்த சாலைக்கு பக்கத்தில் தனியாக நடந்து செல்கிறார்.

அப்போது இவரை பின் தொடர்ந்து கருப்பு நிற உடை அணிந்து வந்த நபர், அந்த சிறுமியின் அருகில் சென்று வற்புறுத்தி, அவரை சீரழிக்க துடிக்கிறார். அப்போது அந்த சிறுமி கத்த, அதைத் தொடர்ந்து அருகில் சைக்கிளில் ஒரு நபர் வந்ததால், குறித்த நபர் உடனே ஒன்றும் தெரியாதது போல் அங்கிருந்து சென்றுவிடுகிறான்.
இது தொடர்பான சிசிடிவி காட்சியை பொலிசார் வெளியிட்டு மக்களின் உதவியை கோரியுள்ளனர். குறித்த நபர் குறித்து அருகில் இருக்கும் வேறு ஏதேனும் சிசிடிவி கமெராவில் பதிவாகியிருக்கலாம், அந்த நபர் அணிந்திருக்கும் உடையை வைத்து கண்டுபிடிக்கலாம்.
இதனால் இவர் தொடர்பாக ஏதேனும் தகவல் இருந்தால், உடனடியாக தெரிவிக்கும் படி பொலிசார் கூறியுள்ளனர். பட்டப்பகலில் தனியாக நடந்து சென்ற சிறுமிக்கு நேர்ந்த இந்த சம்பவத்தை தொடர்ந்து பெண்கள் எப்போதும் தனியாக வெளியில் சென்றால், பாதுகாப்பிற்கு ஏதாவது ஒன்றை வைத்துக் கொள்வது மிகவும் நல்லது என்று கூறப்படுகிறது.






