இலங்கையில் மிகக் குறைந்த வயதான கொவிட் உயிரிழப்பு இன்று பதிவாகியுள்ளது.
20 நாட்களே ஆன சிசு ஒன்று, கொவிட் வைரஸ் தொற்றினால் உயிரிழந்துள்ளதாக சுகாதார பிரிவினர் தெரிவிக்கின்றனர்.
பொரள்ளை சீமாட்டி றிஜ்வே ஆரியா சிறுவர் வைத்தியசாலையிலேயே இந்த சிசு உயிரிழந்துள்ளதாக தெரிய வருகின்றது.
இலங்கையில் கொவிட் தொற்றினால் மிக குறைந்த வயதான ஒருவர் உயிரிழந்த முதலாவது சந்தர்ப்பம் இதுவாகும்.
கொவிட் தொற்றுடன் ஏற்பட்ட நியூமோனதியா காய்ச்சலே இந்த உயிரிழப்புக்கான காரணம் என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்
கொழும்பு – பாலத்துறை (தொட்டலங்க) பகுதியைச் சேர்ந்த சிசுவொன்றே இவ்வாறு உயிரிழந்துள்ளது.
குறித்த சிசு அதிக காய்ச்சல் காரணமாக நேற்றிரவு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக சுகாதார பிரிவினர் தெரிவிக்கின்றனர்.
தாமதித்து, வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டமையினாலேயே, சிசுவை காப்பாற்ற முடியவில்லை என வைத்தியர்கள் தெரிவிக்கின்றனர்.
இதேவேளை, குறித்த குழந்தையின் தாய் மற்றும் தந்தைக்கு நடத்தப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனைகளில் அவர்களுக்கு கொவிட் தொற்று ஏற்படவில்லை என வைத்தியசாலையின் தகவல்கள் தெரிவிக்கின்றன.