முல்லைத்தீவில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட யுவதி: சம்பவம் தொடர்பில் வெளியான அதிர்ச்சி தகவல்

முல்லைத்தீவு – கோயிற்குடியிருப்பு பகுதியில் இளம் குடும்பப் பெண் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக சம்பவம் தொடர்பில் புதிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.

முல்லைத்தீவு, செல்வபுரம், கோயிற்குடியிருப்பு பகுதியை சேர்ந்த சுஜிவிதன் சசிப்பிரியா (26) என்பவர் வீட்டிலிருந்து நேற்று முன்தினம் (6) சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

மட்டக்களப்பை சேர்ந்த இளைஞன் ஒருவரை மணமுடித்த நிலையில், முல்லைத்தீவு நகரிலுள்ள தனியார் நிதி நிறுவனமொன்றில் பணிபுரிந்து வந்துள்ளார்.

அவரது கணவன் ஏற்கனவே திருமணம் முடித்திருந்ததாகவும், அதை மறைத்து இரண்டாவது திருமணம் செய்திருந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இது பற்றிய தகவலை அறிந்த பின்னர் குடும்பத்திற்குள் அடிக்கடி பிரச்சனை ஏற்பட்டுள்ளது.

சம்பவ தினத்திலும், கணவருடன் சண்டையிட்ட பின்னர் மனைவி தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்துள்ளதாக கூறப்படுகின்றது.