சிறையில் பரீட்சை எழுதி தேர்ச்சி பெற்றார் சசிகலா

பெங்களுர் சிறையில் உள்ள சசிகலா அவர்களுக்கு நடத்தப்பட்ட தெரிவு குறித்து தகவல்கள் வெளியாகியுள்ளன.

சசிகலா அவர்கள் தற்போது பெங்களுர் அக்ராஹார சிறையில் உள்ளார். அவரது சிறை தண்டனை வருகிற ஜனவரி 27ம் தேதியுடன் நிறைவு பெறுகிறது. இதனிடையே அவருக்கு விதிக்கப்பட்ட அபராத தொகையும் தற்போது செலுத்தப்பட்டுவிட்டது.

தற்போது கடந்த 4 ஆண்டுகளில் சசிகலா அங்கு என்ன செய்தார், என்ன மாதிரியான நடவடிக்கைகளை, பணிகளை மேற்கொண்டார் என்பது குறித்த தகவல்கள் வெளியாகி வருகின்றன.

அங்கு அரை ஏக்கர் நிலத்தில் விவசாயம் செய்து 1 டன் பப்பாளியை விளைவித்துள்ளார். மேலும் பல வகையான காய்கறிகளையும் அவர் விளைவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.

மேலும் சிறையில் மொழி தெரியாமல் யாருடனும் பேசும் வாய்ப்பு இல்லாமல் இருந்து வந்துள்ளது.

இந்த நிலையில் கல்வி கற்காத கைதிகளுக்கு, கல்வி கற்பிக்க சிறைக்கு ஆசிரியர்கள் வருகை தருவார்கள். அவர்களிடம் கன்னடம் எழுதுவது, படிப்பதை கற்றுக் கொண்டார் சசிகலா. இதன் மூலம் கன்னட மொழித் தேர்வில், மூன்றாம் வகுப்பு தேர்ச்சி பெற்றுள்ளதாக பெங்களூர் வட்டாரத் தகவல்கள் வெளியாகியுள்ளது.