வருமான வரித்துறை பெண் அதிகாரி கார் மோதி விபத்துக்குள்ளான 4 மாத கர்ப்பிணிப்பெண் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ரங்கதாஸ் காலனியை சேர்ந்த அசாருதீன் என்பவரின் மனைவியான கவுஷிபி. சம்பவத்தன்று மருத்துவமனைக்கு சென்று ஸ்கேன் செய்து பார்த்துவிட்டு அந்த தகவலை தனது கணவர் அசாருதீனிடம் தெரிவித்துவிட்டு வீடு திரும்பி கொண்டிருந்தார்.

வீட்டு வாசல் அருகே வந்தபோது பின்னால் வந்த கார் ஒன்று திடீரென மோதியுள்ளது.
அந்த கார் வருமான வரித்துறை பெண் அதிகாரி ஒருவருடையது எனவும், காரை ஓட்டிவந்த பெண் விபத்தை தொடர்ந்து காரைநிறுத்திவிட்டு தப்பி சென்றுவிட்டதாகவும் கூறப்படுகிறது.
மேலும் அந்த காரை பறிமுதல் செய்த போலீசார் திருமங்கலம் போக்குவரத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.






