உலகில் இறுதியாக வசித்த ஆண் வெள்ளை காண்டாமிருகம் இறந்தது

உலகில் இறு­தி­யாக உயிர்­வாழ்ந்த வெள்ளை நிற ஆண் காண்டாமிருகம் கென்­யாவில் இறந்­துள்­ளது.

காண்டா மிரு­கங்கள் பொது­வாக கறுப்பு நிற­மாக காணப்­படும். ஆனால், வெள்ளை நிற காண்டா மிரு­கங்­களும் உள்­ளன.இந்த வெள்­ளை­யின காண்டா மிரு­கங்கள் வேட்­டை­யா­டு­ப­வர்­களால் படிப்­ப­டி­யாக அழிந்து வந்­தன.

இறு­தி­யாக கென்­யாவில் 3 வெள்ளை காண்டாமிரு­கங்கள் எஞ்­சி­யி­ருந்­தன. உலகில் எஞ்­சி­யி­ருந்த கடைசி 3 காண்டா மிரு­கங்கள் இவைதான். இவற்றில் ஒன்று ஆண் ஏனை­யவை இரண்டும் பெண் காண்டாமிரு­கங்கள்.

உலகின் கடைசி ஆண் காண்­டா­மி­ரு­கத்­துக்கு “சூடான்” என பெய­ரி­டப்­பட்­டி­ருந்­தது. சூடானில் பிறந்த இந்த காண்­டா­மி­ருகம் செக் குடி­ய­ர­சி­லுள்ள மிருகக் காட்­சி­சா­லை­யொன்றில் இருந்­தது.

பின்னர் 2009 ஆம் ஆண்டு கென்­யா­வுக்கு இது அனுப்­பப்­பட்­டது. 45 வய­தான விலங்கு இது.
கென்­யாவின் ஒல் பேஜேட்டா சர­ணா­­லயத்தில் வசித்த இந்த 3 வெள்ளை காண்­டா­மி­ரு­கங்­க­ளுக்கும் 24 மணித்­தி­யா­லங்­களும் ஆயுத பாது­காப்பு வழங்­கப்­பட்­டி­ருந்­தது.

அண்­மைக்­கா­ல­மாக உடல்­நலக் குறை­வினால் பாதிக்­கப்­பட்­டி­ருந்த சூடான் எனும் ஆண் காண்­டா­மி­ருகம் இறந்­து­விட்­ட­தாக கென்ய அதி­கா­ரிகள் நேற்று செவ்­வாய்க்­கி­ழமை அறி­வித்­தனர்.

இக்­காண்­டா­மி­ரு­கத்தின் துணை­க­ளாக விளங்­கிய 27 வய­தான நாஜின் மற்றும் 17 வய­தான ஃபட்டு எனும் இரு பெண் காண்டாமிருகங்களே தற்போது உலகில் எஞ்சியுள்ள கடைசி இரு வெள்ளை காண்டாமிருகங்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Get real time updates directly on you device, subscribe now.

You might also like