திருகோணமலை விபத்தில் இரு படை வீரர்கள் காயம்!

திரு­கோ­ண­மலை 5 ஆம் கட்டைப் பகு­தியில் ரிப்பர் வாக­னமும் மோட்டார் சைக்­கிளும் மோதி விபத்­துக்­குள்­ளா­னதில் மோட்டார் சைக்­கிளில் பய­ணித்த இரண்டு இரா­ணுவ வீரர்கள் படு­கா­ய­ம­டைந்த நிலையில் திரு­கோ­ண­மலை வைத்­தி­ய­சா­லையில் அனு­ம­திக்­கப்­பட்­டுள்­ள­தாக திரு­கோ­ண­மலை பொலிஸார் தெரி­வித்­தனர்.

திங்­கட்­கி­ழமை இடம்­பெற்ற இச்­சம்­ப­வத்தில் திரு­கோ­ண­மலை 22 ஆவது இரா­ணுவப் படைப்­பி­ரிவில் கட­மை­யாற்றும் இரு இரா­ணுவ வீரர்­களே படு­கா­ய­ம­டைந்­துள்­ளனர். சம்­பவம் தொடர்­பி­லான மேல­திக விசாரணைகளை திருகோணமலை பொலிஸார் மேற் கொண்டு வருகின்றனர்.

Get real time updates directly on you device, subscribe now.

You might also like