சீரியல் நடிகை சித்ரா நேற்று நட்சத்திர விடுதி ஒன்றில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதையடுத்து, சித்ராவின் சாவில் மர்மம் உள்ளதாக பலரும் கேள்வி எழுப்பிய நிலையில், சித்ராவின் தந்தையும் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
இந்நிலையில், சித்ராவின் இறுதி அஞ்சலியில் கலந்து கொண்ட நடிகர் ஆசீம் கொந்தளித்து பேசியுள்ளது பரபரப்பை கிளப்பி உள்ளது.

தற்கொலை எண்ணத்திற்கு ரொம்பவே எதிரானவள் சித்ரா என்றும், அவர் தற்கொலை செய்து கொண்டார் என்று சொல்வதை கொஞ்சம் கூட ஏற்றுக் கொள்ள முடியாது.
அவரது முகத்தில் எப்படி கீறல் ஏற்பட்டது. சித்ராவின் மரணத்தில் நிச்சயம் மர்மம் இருக்கிறது என்றும் உணர்ச்சிவசப்பட்டு பேசினார்.
மேலும், எம்.எஸ்.சி சைக்காலஜி படிச்சவ சித்ரா, அவ எப்படிங்க சூசைட் பண்ணிப்பா.. சுஷாந்த் சிங் ராஜ்புத் தற்கொலை பண்ணி இறந்தப்ப கூட, தற்கொலை தீர்வல்ல என பதிவு போட்டவங்க..
சித்ரா தற்கொலை தான் செய்து கொண்டார் என பிரேத பரிசோதனை அறிக்கை கொடுத்துருக்காங்க,
ஆனால், இதுல வேற ஏதோ நடத்திருக்கு, அவ நிச்சயம் அப்படி செய்திருக்க மாட்டா, வாய்ப்பில்லாமல் 6, 7 மாசம் வீட்டில் இருந்தால் கூட அப்படி சொல்லலாம்.
தற்கொலை செய்து கொள்வதற்கு முதல் நாள் இரவு வரை ஷூட்டிங்கில் இருந்தவர் எப்படி அப்படி செய்து கொள்ள முடியும் என்றும் ஆசீம் கேள்வி எழுப்பி உள்ளார்.
மேலும், சித்ராவின் இறப்பு தலைகாணியை வைத்து யாரோ அமுக்கு கொலைசெய்ததுபோல் தெரிகிறது என ஆசீம் அதிர்ச்சியான தகவலையும் வெளியிட்டுள்ளார்.






