இன்று யாழ். போதனா வைத்தியசாலை ஆய்வு கூடம் மற்றும் யாழ். மருத்துவபீட ஆய்வுகூடத்தில் 363 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது.
மருதனார் மடத்தைச் சேர்ந்த ஒருவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. வவுனியா தனிமைப்படுத்தல் நிலையத்தைச் சேர்ந்த இருவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
மருதனார் மட சந்தையில் எழுந்தமானமாக மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனையில் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் இன்று மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் அவருக்கு தொற்று உறுதியானது.
மருதனார்மடம் சந்தையில் மரக்கறி கடை வைத்துள்ள ஒருவரே தொற்றிற்குள்ளாகினார். அந்த பகுதியில் உள்ள முச்சக்கரவண்டி சாரதிகளிடம் எழுமாற்றாக பிசிஆர் சோதனை மேற்கொள்ளப்பட்டது.
குறிப்பிட்ட நபரும் முச்சக்கர வண்டி வைத்திருப்பவர் என்ற அடிப்படையில், பிசிஆர் சோதனைக்குள்ளானார்.
இதன்போது அவருக்கு தொற்று உறுதியானது.
யாழ்ப்பாணத்தில் எழுமாற்றாக மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் சோதனையில் அடையாளம் காணப்பட்ட முதலாவது தொற்றாளர் இவராவார்.
அவருக்கு எப்படி தொற்று ஏற்பட்டது என்பது இன்னும் உறுதியாகவில்லை.