யாழ்.மருதனார்மடத்தில் கொரோனா தொற்றாளர்கள் பலர் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் உடுவில் பிரதேச எல்லைக்குள் உள்ள சகல பாடசாலைகளையும் மூடுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக மாகாண சுகாதார பணிப்பாளர் ஆ.கேதீஸ்வரன் கூறியுள்ளார்.
இன்று காலை ஊடகங்களை சந்தித்து கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனை கூறியுள்ளார்.
இது தொடர்பில் , பாடசாலைகளை மூடுவது தொடர்பில் வலயக்கல்வித் திணைக்கள அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதேவேளை மருதனார்மடத்தில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகளின் பிசிஆர் முடிவுகளின் விபரங்கள் இன்று மாலையே வெளியிடப்பட்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
மேலும் யாழ்ப்பாணத்தின் ஏனைய பொதுச் சந்தைகளிலும் உள்ளவர்கள் அனைவருக்கும் பிசிஆர் பரிசோதனை மேற்கொள்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் இதன்போது தெரிவித்தார்.