சுற்றுலா பயணிகளுக்காக விமான நிலையங்கள் திறக்கப்படவுள்ள நிலையில் வெளிநாட்டவர்கள் 7 நாட்கள் ஹோட்டல்களில் தனிமைப்படுத்தப்படுவார்கள் என அரசாங்கம் அறிவித்திருக்கின்றது.
சுற்றுலா பயணிகள் நாட்டின் தெற்கு, கிழக்கு மற்றும் வடமேற்கில் உள்ள கடலோரப் பகுதிகளிற்குள்ளேயே தங்க வைக்கப்படுவார்கள் என்றும் குறிபிடப்பட்டுள்ளது.
பொருளாதார மீளெழுச்சி மற்றும் வறுமை ஒழிப்புக்கு பொறுப்பான ஜனாதிபதி செயலணியின் தலைவரான பசில் ராஜபக்ஷ தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் சுற்றுலாத் துறைக்கு நாடு மீண்டும் திறக்கப்படுவது குறித்த விவரங்கள் வெள்ளியன்று விவாதிக்கப்பட்டன.
அதன்படி, தேர்ந்தெடுக்கப்பட்ட நாடுகளில் இருந்து வரும் சுற்றுலாப் பயணிகளை ஜனவரி இரண்டாவது வாரத்திலிருந்து விமான நிலையம் திறக்கப்பட்டு அனுமதிக்க திட்டங்கள் தயாரிக்கப்பட்டு வருகின்றன.
தேவையான சுகாதார வழிகாட்டுதல்களை வரைவதற்கு சுகாதார அமைச்சகத்திடம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனாவால் சுற்றுலாத்துறை இந்த ஆண்டுக்கு பெரும் இழப்புகள் ஏற்பட்ட நிலையில் இந்த ஆண்டு மட்டும் 2.7 பில்லியன் அமெரிக்க டொலர் (ரூ .500 பில்லியன்) வருவாய் இழப்பு இருப்பதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.