வெயங்கொட – நைவல பகுதியைச் சேர்ந்த 7 வயதான சிறுவன் ஒருவன் வேற்று மொழிகளை பேசுவது பலரையும் ஆச்சரியத்துக்கு உள்ளாகியுள்ளது.
நைவல பகுதியைச் சேர்ந்த குறித்த சிறுவன் சேனுர வீரசிங்க, தனது தாய் மொழியை விடவும் இவ்வாறு திடீரென ஹிந்தி மற்றும் ஆங்கில மொழிகளை சரளமாக பேச ஆரம்பித்துள்ளார்.
இச்சிறுவனின் தந்தை, வாகன இயந்திர திருத்த பணிகளை செய்யும் ஒரு வேலையை செய்து வருகின்றார்.

முழு சிங்கள மொழி சூழலில் வாழ்ந்துவரும் இந்த சிறுவன், திடீரென ஹிந்தி மற்றும் ஆங்கில மொழிகளில் பேச ஆரம்பித்துள்ளார்.
அத்துடன், விண்வெளி தொடர்பான விடயங்கள், இயற்கை தொடர்பான விடயங்கள், மிருகங்கள் குறித்து ஆழமாகவும் அந்த சிறுவன் கதைக்க ஆரம்பித்துள்ளார்.
அத்துடன் தான் முன் பிறவியில் விமான விபத்தொன்றில் உயிரிழந்ததாக அந்த சிறுவன் கூறியமை, மேலும் ஆச்சரித்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில் சிறுவனின் முன் ஜென்மம் காரணமாக அவர் இவ்வாறு இருக்கலாம் என பலரும் பலவித கருத்துக்களை முன்வைத்து வருகின்றனர்.






